For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கேவை விட ஆர்சிபிக்கு தான் அதிக ரசிகர்கள்.. வெளிச்சத்துக்கு வந்த உண்மை.. உற்சாகத்தில் கோலி படை

மும்பை: ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்கள் உடைய அணி என்றால், அது சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தான்.

எனினும் இவ்விரு அணிகளும் சேர்ந்து 9 முறை, ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இதனால், அதிக ரசிகர்கள் இருப்பது சாத்தியம் தான்,

ஆனால், ஒரு முறை கூட கோப்பை வாங்கவில்லை என்றாலும் தொடர்ந்து ஆதரவு அளிப்பது என்பது ஆர்சிபிக்கு கிடைத்த வரம் என்றே சொல்லலாம்.

அதிக பார்வையாளர்கள்

அதிக பார்வையாளர்கள்

நடப்பு சீசனில் ஹாட் ஸ்டாரில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட போட்டி என சென்னை, மும்பை மோதிய ஆட்டம் இருந்தது. அந்தப் போட்டியை 83 லட்சம் பேர் ஹாட் ஸ்டாரில் கண்டு களித்தனர். தற்போது அதனை பெங்களூரு, லக்னோ அணிகள் மோதிய எலிமினேட்டர் ஆட்டம் முறியடித்துள்ளது.

ஆர்சிபி சாதனை

ஆர்சிபி சாதனை

இந்தப் போட்டியை சுமார் 87 லட்சம் பேர் ஹாட் ஸ்டாரில் கண்டு களித்துள்ளனர். இதன் மூலம், சிஎஸ்கே, மும்பை ரசிகர்கள் பட்டாளத்தை ஆர்சிபி முறியடித்த விட்டதாக கண்ணன் தேவன் டீ பொடி ரசிகர்கள் பாட்டு பாடி கிண்டலடித்து வருகின்றனர். ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை என்றாலும் கோலி என்ற ஒற்றை வீரருக்காக பலரும் தற்போது ஆர்சிபி அணிக்காக ஆதரவு அளித்து வருகின்றனர்.

நல்ல வாய்ப்பு

நல்ல வாய்ப்பு

இதனால் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் வாய்ப்பு இம்முறை ஆர்சிபிக்கு ஏற்பட்டுள்ளது. பிதிய கேப்டன், அனுபவ வீரர்கள் சொதப்பினாலும் கைக் கொடுக்கும் இளம் வீரர்கள் என்று ஆர்சிபி அணிக்கு இம்முறை எல்லாம் சரியாக அமைந்துள்ளது. பந்தவீச்சிலும் ஹர்சல் பட்டேல், ஹசரங்கா என அனைவரும் கை கொடுக்கின்றனர்.

ஒரு லட்சம் பார்வையாளர்கள்

ஒரு லட்சம் பார்வையாளர்கள்

தற்போது குவாலிபையர் 2 வில் ஆர்சிபி அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலம். போட்டியை தனி ஆளாக மாற்ற கூடிய நட்சத்திர வீரர்கள் உள்ளனர். அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியை ஒரு லட்சம் பார்வையாளர்கள் பார்க்க உள்ளனர்.

Story first published: Thursday, May 26, 2022, 16:41 [IST]
Other articles published on May 26, 2022
English summary
IPL 2022 – RCB Earned Most viewership in hotstar சிஎஸ்கேவை விட ஆர்சிபிக்கு தான் அதிக ரசிகர்கள்.. வெளிச்சத்துக்கு வந்த உண்மை.. உற்சாகத்தில் கோலி படை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+