Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆர்சிபி அணியில் இடம்பெற்றுள்ள அடுத்த கில்கிறிஸ்ட்..129 பந்துகளில் 312 ரன்கள் குவித்தவர்..யார் அவர்?

பெங்களூரு: ஐபிஎல் 15வது சீசனில் ராயல் சேலஞர்ஸ் அணி ஒரு அதிரடி இளம் வீரரை தேர்வு செய்துள்ளது.

மும்பையில் நடைபெற்ற வலைப் பயிற்சியில் அந்த இளங்கன்று பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டுள்ளார்

அந்த வீரரை பார்த்த விராட் கோலி. நான் கேப்டனாக இருக்கும் போது நீ எங்கய்யா இருந்த என்று அணி நிர்வாகிகளுடன் பேசியுள்ளார்.

312 ரன்கள்

312 ரன்கள்

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த லவ்னித் ஷிசோடியா 21 வயதான அவர், பி.சி.சி.ஐ. நடத்தும் 25 வயதுக்குட்பட்டவர்களுக்கான தொடரில் பங்கேற்று கலக்கியுள்ளார். அந்த தொடரில் பவர்பிளேவில் அவரது ஸ்டைரக் ரேட் 231 ஆகும்இதே போன்று கார்ப்ரேட் கிரிக்கெட் ஒருநாள் தொடரில் பங்கேற்ற அவர் 129 பந்துகளில் 312 ரன்கள் விளாசியுள்ளார்.

பயிற்சியில் அசத்தல்

பயிற்சியில் அசத்தல்

இதனால் அவரை பற்றி அறிந்த ஐ.பி.எல். அணிகள், அவரது திறமையை பரிசோதிக்க அழைத்தது. ஆனால் ஏலத்தில் லவ்னித்தை வெறும் 20 லட்சம் ரூபாய் கொடுத்து தட்டி தூக்கியது பெங்களூரு அணி. மும்பையில் நடைபெற்ற வலைப் பயிற்சியில் லவ்னித் ஷிசோடியா அதிரடியாக விளையாடி பந்துகளை சிக்சருக்கு பறக்கிவிடுகிறார் .

ஆலோசனை

ஆலோசனை

இதனால் லவ்னித் ஷிசோடியாவை பஞ்சாப்க்கு எதிரான முதல் போட்டியிலேயே களமிறக்கி சோதித்து பார்க்கலாம் என்று பெங்களூரு அணி யோசித்து வருகிறது. பெங்களூரு அணியில் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பர் பொறுப்பை வகித்து வருகிறார். இதனால் லவ்னித்தை டுபிளஸிஸ் உடன் தொடக்கத்தில் களமிறக்கலாமா என்று பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மகிழ்ச்சி செய்தி

மகிழ்ச்சி செய்தி

பயிற்சியிலும், உள்ளூர் போட்டியிலும் ஆடுவதை வைத்து ஒருவரை முழுயைமாக எடைப்போட முடியாது. அதுவும் ஐபிஎல் போன்ற ஒரு தொடரில் சவால்கள் மிகவும் அதிகம் இருக்கும். இதனால் இந்த சவாலை லவ்னித் தாங்குவாரா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும். ஆனால் அந்த சவாலை எதிர்கொள்ள லவ்னித் தயாராகிவிட்டதாக தான் ஆர்சிபி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோலி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தான்.

Story first published: Saturday, March 19, 2022, 19:02 [IST]
Other articles published on Mar 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+