For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மாட்டிக்கிட்டையே பங்கு.. கில் விக்கெட்டில் போங்கு செய்த ஆர்சிபி.. எதிர்பார்க்காத விடை தந்த நடுவர்!!

மும்பை: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி விக்கெட் கீப்பர் செய்த விஷயம் வேடிக்கையாகியுள்ளது.

43வது லீக் ஆட்டத்தில் குஜராத் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் 170 ரன்களை குவித்தது.

விராட் கோலி அரைசதம்

விராட் கோலி அரைசதம்

கேப்டன் டூப்ளசிஸ் டக் அவுட்டாகி சொதப்பிய போதும், பொறுப்புடன் விளையாடிய விராட் கோலி அரைசதம் அடித்து அணியை காப்பாற்றினார். அவருக்கு உறுதுணையாக ராஜத் பட்டிதரும் அரைசதம் அடித்ததால் குஜராத்திற்கு கடினமான இலக்கு நிர்ணயிக்க முடிந்தது.

 சுவாரஸ்ய சம்பவம்

சுவாரஸ்ய சம்பவம்

இந்நிலையில் இலக்கை துரத்திய போது தான் சுவாரஸ்ய சம்பவம் நடந்தது. தொடக்க வீரர்கள் விருதிமான் சாஹா - சுப்மன் கில் ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அச்சுறுத்தல் தந்தனர். அவர்களை பிரிக்க ஆட்டத்தின் 9வது ஓவரில் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

என்ன நிகழ்ந்தது

என்ன நிகழ்ந்தது

அந்த ஓவரில் சபாஷ் அகமது வீசிய வைட் லைன் பந்தை, சுப்மன் கில் அடிக்க முயன்ற போது தவறியது. எனினும் அது எட்ஜ் கேட்சானதாக கூறி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அவுட் கேட்டு கத்தினார். களத்தில் இருந்த நடுவரும் அவுட் கொடுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சுப்மன் கில் 3வது நடுவருக்கு முறையிட்டார். ஆனால் கிடைத்த விடையோ யாரும் எதிர்பார்க்காத ஒன்று.

நடுவரின் முடிவு

நடுவரின் முடிவு

பந்தானது சுப்மன் கில்லின் பேட்டில் எட்ஜாகவில்லை என்பது தெரியவந்தது. ஆனால் விக்கெட் கீப்பரின் க்ளவுஸ் ஸ்டம்பை தாண்டி இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது விக்கெட் கீப்பர் ஸ்டம்ப்பை தாண்டி கைகளை நீட்டினால் அது நோ பால் என அறிவிக்கப்படும். அந்தவகையில் இதற்கு நோ பால் கொடுக்கப்பட்டது. தேவையின்றி அவுட் கேட்க சென்று ஒரு எக்ஸ்ட்ரா ரன்னை இழந்தது தான் மிட்சம் என ரசிகர்கள் கிண்லடித்து வருகின்றனர்.

Story first published: Saturday, April 30, 2022, 19:37 [IST]
Other articles published on Apr 30, 2022
English summary
RCB vs GT match ( குஜராத் vs ஆர்சிபி போட்டி ) குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி செய்த ஒரு விஷயம் இணையத்தில் வேடிக்கையாகியுள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+