Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆர்சிபி அணிக்காக ரசிகை போட்ட சபதம்.. சிஎஸ்கே ஆட்டத்தில் கவனத்தை ஈர்த்த பெண்.. கிண்டலுக்கு ஆளான ரசிகை

மும்பை: ஐபிஎல் தொடரில் ஸ்டார் அந்தஸ்து அடைந்த அணிகளில் ஆர்சிபியும் ஒன்று. அதற்கு காரணம் கோலி, கெயில், டிவில்லியர்ஸ் என பல அதிரடி வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இதனால் ஆர்சிபி அணிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். ஆனால், இத்தனை இருந்தும் இதுவரை ஒரு முறை கூட ஆர்சிபி அணி கோப்பை வாங்கியது இல்லை.

இதன் காரணமாக விராட் கோலி தனது கேப்டன் பதவியையே இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஆர்சிபி ஆசை

ஆர்சிபி ஆசை

இந்த நிலையில், ஆர்சிபி அணி புத்தஙம புது தோற்றம் மற்றும் புதிய கேப்டனுடன் ஐபிஎல் 15வது சீசனில் களமிறங்குகிறது. பேட்டிங், பந்துவீச்சு என மிரட்டுவதால், புதிய கேப்டனான டுபிளஸிஸ், இம்முறை கோப்பையை வென்று தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆர்சிபி அணியின் தாரகமந்திரமான ஈ சாலா கம் நம்தே, இம்முறையாவது நிறைவேறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ரசிகை சபதம்

ரசிகை சபதம்

இந்த நிலையில், சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆர்சிபி லீக் ஆட்டத்தில் ரசிகை ஒருவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். குறிப்பாக பெண்கள், விராட் கோலி ஐ லவ் , என்னை கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று தானே பதாகையில் எழுதி ஏந்தி காட்டுவார்கள். இங்கு ஒரு பெண் சபதம் போட்டுள்ளார்.

நிறைவேறுமா சபதம்

நிறைவேறுமா சபதம்

அதாவது, ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வெல்லாத வரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அந்த பெண் பதாகையில் எழுதியுள்ளார். தற்போது அந்த பெண், சமூக வலைத்தளத்தில் கேலி, கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். ஆர்சிபி அணியை பிடிக்காத பலரும் அந்த பெண்ணை ஓட்டி வருகின்றனர்.

கிண்டலுக்கு ஆளான ரசிகை

கிண்டலுக்கு ஆளான ரசிகை

திருமணம் பிடிக்கவில்லை என்பதாற்காக இப்படி கூறுவதா என்றும், தங்களது இந்த சபதத்தால் கடைசி வரை ஓவையார் போல் தான் இருப்பீர்கள் என்று சில நெட்டிசன்களும் கிண்டல் செய்தனர். ஒரு சிலர் அந்த பெண்ணின் சபதம் இந்த ஆண்டே நிறைவேற வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளனர். இப்படி ரசிகர்கள் புதுசா புதுசா எழுதி கேமிராவில் காட்டுவது நகைச்சுவையாக அமைந்துள்ளது.

Story first published: Tuesday, April 12, 2022, 21:19 [IST]
Other articles published on Apr 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+