Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லை மீறி போறீங்கப்பா.. மேக்ஸ்வெல் - வினி ராமனுக்காக ஆர்சிபி வெளியிட்ட வீடியோ..கொந்தளித்த ரசிகர்கள்

மும்பை: க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் அவரது மனைவி வினி ராமனுக்கு ஆர்சிபி தந்த அதிர்ச்சி வைத்தியம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி புதிய கேப்டன் டூப்ளசிஸுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

முதல் போட்டியில் தோல்வியடைந்த போதும், 2வது போட்டியில் அட்டகாசமான கம்பேக் கொடுத்திருந்தது.

வெற்றிப்பாதையில் ஆர்சிபி

வெற்றிப்பாதையில் ஆர்சிபி

ஆம், முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை எதிர்கொண்ட ஆர்சிபி அணி 205 ரன்களை குவித்தும் வெற்றி பெறவில்லை. 2வது போட்டியில் கொல்கத்தா அணியை 128 ரன்களுக்கெல்லாம் சுருட்டி அபார வெற்றியை பதிவு செய்தது. குறிப்பாக கோலி - டூப்ளசிஸுன் ஒற்றுமையான செயல்பாடுகள் பாராட்டப்பட்டன.

புதுமாப்பிள்ளை வருகை

புதுமாப்பிள்ளை வருகை

இந்நிலையில் இந்த கூட்டணியில் 3வதாக ஒரு நபர் இணைந்துள்ளார். ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் இன்று ஆர்சிபியின் முகாமில் இணைந்தார். சமீபத்தில் தான் மேக்ஸ்வெல்லுக்கும் - தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வினி ராமனுக்கும் தமிழ் முறைப்படி திருமணம் நடந்தது. இது நடந்த நான்கே நாட்களில் கடமையாற்ற வந்துவிட்டார்.

ஆர்சிபி தந்த சர்ஃபரைஸ்

ஆர்சிபி தந்த சர்ஃபரைஸ்

மேக்ஸ்வெல் - வினி ராமனை வரவேற்க ஆர்சிபி அணி சார்பில் அதிர்ச்சி வைத்தியம் தரப்பட்டுள்ளது. அணியின் சமூக வலைதளப்பக்கங்களில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர்கள் இருவரும் தங்கவுள்ள அறையை காண்பித்துள்ளனர். புது ஜோடிக்காக ஸ்பெஷலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள படுக்கைகள், அலங்காரங்கள் ஆகியவை காண்பிக்கப்பட்டுள்ளன. மேலும் அவர்களின் புகைப்படங்கள், உண்பதற்கு திண்பண்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

கிண்டலடிக்கும் ரசிகர்கள்

கிண்டலடிக்கும் ரசிகர்கள்

இதற்கு ஒருபுறம் ரசிகர்கள் வாழ்த்துக்கூறினாலும், மற்றொரு புறம் ஆர்சிபி அணியை மோசமாக விமர்சித்து வருகின்றனர். புதுமண தம்பதியின் அறையை இப்படியா அனைவருக்கும் வீடியோ எடுத்து காண்பிப்பது, இது தவறான செயல் என கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

Story first published: Friday, April 1, 2022, 18:48 [IST]
Other articles published on Apr 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+