“ஐயோ அவரா??.. பயங்கரமான ஆளாச்சே!!” மும்பையின் அஸ்திவாரத்தையே சரிக்கும் பவுலர்.. ஆர்சிபியின் ஆயுதம்
மும்பை: மும்பை அணியின் ஆணிவேரையே ஆட்டிப் பார்க்க கூடிய ஒரு பவுலரை ஆர்சிபி களமிறக்குவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதவுள்ளன.
தொடர்ந்து 3 தோல்விகளை சந்தித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, முதல் வெற்றியை பெற வேண்டும் என வெறியுடன் உள்ளது.

மும்பை அணியின் நிலை
கொல்கத்தா அணிக்கு எதிரான கடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிக்கு அருகில் வரை சென்று தோற்றது. பேட்டிங்கில் இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட் என அனைவரும் ஃபார்முக்கு திரும்பியுள்ளனர். ஆனால் ஒரே ஓவரில் டேனியல் சாம்ஸ் 35 ரன்களை விட்டுக்கொடுத்ததால் அனைத்தும் தலைகீழானது. இதனையடுத்து இன்றைய போட்டியில் அனைத்தையும் சரி செய்யும் என தெரிகிறது.

ஆர்சிபி ஆயுதம்
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் எவ்வளவு தான் சிறப்பாக இருந்தாலும், அதனை தகர்க்க ஆர்சிபி திட்டம் வைத்துள்ளது. அது ஹர்ஷல் பட்டேல் தான். கடந்த சீசனில் ஆர்சிபி - மும்பை அணிகள் மோதிய 2போட்டிகளிலும் 5/27(4), 4/17(4) என்ற அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். பவர் ப்ளே மற்றும் டெத் ஓவர் என ஸ்பெஷலிஸ்டாக இருக்கும் இவரின் பவுலிங்கை சமாளிக்க மும்பை அணி திணறுகிறது.

2 தோல்விகள்
கடந்த சீசனில் ஆர்சிபி அணிக்கு எதிராக மும்பை அணி விளையாடிய 2 போட்டிகளிலும் மோசமான தோல்வியை மட்டுமே பெற்றது. இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது ஹர்ஷல் பட்டேலின் அந்த பவுலிங் மட்டும் தான். எனவே இந்த முறை அவரை மிகவும் கவனத்துடன் மும்பை அணி எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

கூடுதல் தலைவலி
இதுமட்டுமல்லாமல் இந்தாண்டு ஹர்ஷல் பட்டேலுடன் சேர்த்து, டேவிட் வில்லி, ஆகாஷ் தீப், முகமது சிராஜ் என அதிவேக பவுலர்கள் இருப்பதால் ஓப்பனிங்கில் ரோகித்தே நிலைத்து நிற்பாரா என்பது சந்தேகம். மும்பை அணியில் ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே கூறிக்கொள்ளும்படி சிறப்பாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications