
ராஜஸ்தானின் ஆதிக்கம்
இதுவரை விளையாடிய 2 போட்டிகளில் அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதில் மும்பை அணிக்கு எதிராக டாஸில் தோற்ற போதும், பட்லர் அட்டகாசமான வெற்றியை பெற்றுக்கொடுத்தார். மறுபுறம் ஆர்சிபி அணி டூப்ளசிஸின் கேப்டன்சியில் கம்பேக் கொடுத்துள்ளது. இதுவரை ஆடியுள்ள 2 போட்டிகளில் ஒரு தோல்வி மற்றும் ஒரு வெற்றியுடன் உள்ளது.

ஆர்சிபி முடிவுகட்டுமா?
இந்நிலையில ராஜஸ்தான் அணிக்கு முடிவு கட்டும் வகையில் ஆர்சிபி அமைந்துள்ளது. இதுவரை இந்த இரண்டு அணிகளும் ஐபிஎல் தொடரில் 24 போட்டிகளில் மோதி 10 போட்டிகளில் வெற்றி மற்றும் ஆர்சிபி அணி 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.

தொடர்ச்சியாக 4 வெற்றி
ஐபிஎல் தொடரில் கடந்த 2 சீசன்களிலும், இந்த இரண்டு அணிகளும் மோதிய அனைத்து (4) போட்டிகளிலும் ஆர்சிபியே வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது 2வது பேட்டிங் செய்வது தான். ஆர்சிபி இதுவரை 9 முறை ராஜஸ்தானுக்கு எதிராக 2வதாக பேட்டிங் செய்து வெற்றி கண்டுள்ளது.

ஆர்சிபிக்கு பின்னடைவு
ஆர்சிபி அணிக்கு இன்றைய ஆட்டத்தில் ஒரே ஒரு பின்னடைவாக இருக்கப்போவது க்ளென் மேக்ஸ்வெல் இல்லாதது தான். குவாரண்டைனில் இணைந்த அவர் இன்னும் விளையாடுவதற்கு தயாராகவில்லை என்பதால் மீண்டும் மிடில் ஆர்டரில் தினேஷ் கார்த்திக்கை நம்பி விளையாடவுள்ளது.


Click it and Unblock the Notifications











