“விராட் கோலி ஃபார்முக்கு வந்துட்டார்..” ஆர்சிபி கோச் தந்த முக்கிய அப்டேட்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
மும்பை: விராட் கோலி ஃபார்முக்கு வந்துவிட்டார் என ஆர்சிபி அணி பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு அருகே சென்ற போதும், ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
இதற்கு காரணம் விராட் கோலியின் மோசமான ஃபார்ம் தான். தொடர்ந்து ஒவ்வொரு போட்டியிலும் சொதப்பி வருகிறார்.

விராட் கோலி ஃபார்ம்
நடப்பு தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 236 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதில் 3 முறை டக் அவுட்டாகி தனது கிரிக்கெட் பயணத்திலேயே மோசமான சீசனை சந்தித்துள்ளார். டி20 கிரிக்கெட்டிலேயே 45 - 50 சராசரி வைத்திர்ந்த கோலி இந்த சீசனில் 19 ரன்கள் மட்டுமே வைத்துள்ளார்.

வேதனை வார்த்தைகள்
விராட் விளையாட நினைத்தாலும் அவரின் துரதிஷ்வசம் துரத்திக்கொண்டே தான் இருக்கிறது. பஞ்சாப் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் 20 ரன்களுக்கு வெளியேறினார். இதனால் விரக்தியடைந்த கோலி, வானத்தை பார்த்து " கடவுளே என்னை இதற்கு மேல் நான் என்னதான் செய்ய வேண்டும் என நினைக்கிறாய், என்னை சோதிக்கிறாய்" என புலம்பினார். இது ரசிகர்களை மனவேதனை அடைய வைத்தது.

பயிற்சியாளர் தந்த நம்பிக்கை
இந்நிலையில் கோலி குறித்து ஆர்சிபி பயிற்சியாளர் மைக் ஹெசன் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். அதில், விராட் தற்போது ஃபார்முக்கு வந்துவிட்டார். அவரின் ஆட்டம் முன்பை போன்றே ஆக்ரோஷமாக இருந்தது. அவர் பந்தை எதிர்கொண்ட விதம் நம்பிக்கையாக இருந்தது. எனவே நேற்று அவரின் நாளாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் காலம் அதுபோன்று நினைக்கவில்லை. கோலி தற்போது யாரும் நினைத்து பார்க்காத மன உளைச்சலில் உள்ளார்.

காத்திருப்போம்
தனது ஃபார்மை மீண்டும் கொண்டு வர கோலி செய்த பயிற்சிகள் பலனளித்துள்ளது. பேட்டிங்கில் எந்த தவறுமே இல்லை. துரதிஷ்டவசமாக அவரால் ரன் அடிக்க முடியவில்லை. ஆனால் நான் அடித்துக்கூறுகிறேன். இனி கோலியிடம் இருந்து நான் ஸ்பெஷல் ஆட்டங்களை எதிர்பார்க்கலாம். அட்டகாசமான போட்டிகள் கோலியின் பேட்டிங்கிற்கு உள்ளது. அந்த அளவிற்கு ஃபார்மில் உள்ளார்.


Click it and Unblock the Notifications