Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் - ஆர்சிபி பயிற்சி ஆட்டம்.. பொளந்து கட்டிய டுபிளஸிஸ்.. 200 ரன்களுக்கு மேல் அடித்து அசத்தல்

மும்பை: ஐபிஎல் 15வது சீசனையொட்டி நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஆர்சிபி வீரர்கள் ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு ஒவ்வொரு அணியும் தங்களது அணியை 2ஆக பிரித்து பயிற்சி ஆட்டத்தில் மோத வைப்பார்கள்.

இந்த நிலையில், மும்பையில் ஆர்சிபி அணியின் பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இதில் டீம் ஏ, டீம் பி என 2 அணிகள் பிரிக்கப்பட்டது.

டுபிளஸில் அதிரடி

டுபிளஸில் அதிரடி

முதலில் விளையாடிய டீம் ஏவில் ஆர்சிபி வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதில் சிஎஸ்கே அணியிலிருந்து ஆர்சிபி அணிக்கு வந்து கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள டுபிளஸிஸ் பந்துவீச்சை பொளந்து கட்டினார். பந்துகளை பவுண்டரி, சிக்சர் என டுபிளஸிஸ் விரட்டினார். அவருக்கு ருத்தர்ஃபோர்ட் அதிரடியாக 31 பந்துகளில் 59 ரன்கள் விளாசினார்.

ஹர்சல் 3 விக்கெட்

ஹர்சல் 3 விக்கெட்

கேப்டன் டுபிளஸிஸ் 40 பச்நதுகளில் 76 ரன்கள் சேர்க்க, இளம் வீரர் அனுஜ் ராவத் 25 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். இதனால் 20 ஓவர் முடிவில் டீம் ஏ அணி 20 ஓவர் முடிவில் 215 ரன்கள் விளாசினர். பந்துவீச்சில் ஹர்சல் பட்டேல் 3 விக்கெட்டுகளையும், கரன் சர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

அசத்திய இளம் படை

அசத்திய இளம் படை

இதனையடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டீம் பி அணியில் சுயாஷ் யாரும் எதிர்பாராத விதமாக அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். 46 பந்துகளில் 87 ரன்களில் விளாசினார். டேவிட் வில்லி 25 ரன்கள் சேர்த்தார். டீம் பியில் நடுவரிசையில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தினேஷ் கார்த்திக் அபாரம்

தினேஷ் கார்த்திக் அபாரம்

தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் 49 ரன்கள் விளாச, டீம் பி அணி 20 ஓவர் முடிவில் 213 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. அக்சதீப் 4 விக்கெட்டுகளும், ஹசரங்கா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்கள். ஆர்சிபி அணி தனது முதல் போட்டியில் வரும் 27ஆம் தேதி பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.

Story first published: Friday, March 25, 2022, 12:53 [IST]
Other articles published on Mar 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+