Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கண்ணாடிய திருப்புனா ஆட்டோ ஓடுமா..? ஆர்சிபி அணி மீண்டும் தோல்வி.. வச்சு செய்யும் ரசிகர்கள்!

மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி பெரும் சொதப்பலால் தோல்வியடைந்தது.

இரு அணிகளும் மோதிய 39வது லீக் போட்டி புனே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி பெரும் போராட்டத்திற்கு பிறகு நல்ல ஸ்கோரை அடித்தது.

ராஜஸ்தான் பேட்டிங்

ராஜஸ்தான் பேட்டிங்

நல்ல ஃபார்மில் இருந்த ஓப்பனிங் வீரர் ஜாஸ் பட்லர் 8 ரன்களுக்கு வெளியேறினார். மற்றொரு வீரர் தேவ்தத் பட்டிக்கல் 7 ரன்களுக்கு வெளியேறினார். இதன் பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 27 ரன்கள், டேர்லி மிட்செல் 16 ரன்களை மட்டுமே எடுத்தனர். தடுமாறி வந்த ராஜஸ்தான் அணியை ரியான் பராக் மட்டும் மீட்டுக்கொண்டு வந்தார்.

கடைசி நேர ஆட்டம்

கடைசி நேர ஆட்டம்

31 பந்துகளை சந்தித்த ரியான் பராக் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 56 ரன்களை விளாசினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 144 ரன்களை குவித்தது. புனே களத்தில் 145 ரன்கள் என்பது சுலபமாக விரட்டக்கூடிய இலக்கு தான். எனினும் ஆர்சிபிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மீண்டும் ஏமாற்றம்

மீண்டும் ஏமாற்றம்

ஓப்பனிங் களமிறங்கினால் சிறப்பாக விளையாடுவார் என விராட் கோலி மீது நம்பிக்கை வைத்தனர். எனினும் அவர் 9 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றினார். டூப்ளசிஸ் 23 ரன்களுக்கும், ராஜட் பட்டிதார் 16 ரன்களுக்கும் வெளியேறினர். பொறுப்புடன் ஆட வேண்டிய க்ளென் மேக்ஸ்வெல் டக் அவுட்டும், தினேஷ் கார்த்திக் 6 ரன்களும் பெவிலியன் திரும்பினர்.

மோசமான தோல்வி

மோசமான தோல்வி

ஒரு வீரர் கூட நிலைத்து நின்று விளையாடததால் ஆர்சிபி அணி 19.3 ஓவர்களுக்குள் 115 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ராஜஸ்தான் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் 12 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு சென்றது.

Story first published: Tuesday, April 26, 2022, 23:39 [IST]
Other articles published on Apr 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+