For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காவ்யா மாறன் போட்ட ஸ்கெட்ச்.. சிக்கலில் சிக்கிய ஆர்சிபி அணி.. ரூ.10 கோடி அபேஸ்!

பெங்களூரு: ஐதராபாத் அணி உரிமையாளர் காவ்யா கலாநிதி மாறன் ஆடிய கேம்- ஆல் ஆர்சிபி அணி பல கோடிகளை பறிகொடுத்துள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம் இன்று தொடங்கி கடும் போட்டிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு அணியும் தங்களது அணி வீரர்களை தேர்வு செய்வது மட்டுமல்லாமல் பட்ஜெட்டிலும் பிரச்சினை வரக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளன.

ஹர்ஷலுக்ககா போராட்டம்

ஹர்ஷலுக்ககா போராட்டம்

ஆனால் ஆர்சிபி அணி மட்டும் ஒரு இடத்தில் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. கடந்த சீசனில் ஆரிசிபி அணிக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்த இளம் வீரர் ஹர்ஷல் பட்டேல் இந்த முறை பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஏலம் விடப்பட்டார். ஆனால் அவரை எடுக்க மற்ற அணிகள் ஆர்வம் காட்டாத போதும், ஆர்சிபி மீண்டும் எடுக்க நினைத்தது.

காவ்யாவின் ப்ளான்

காவ்யாவின் ப்ளான்

ஹர்ஷல் பட்டேலை வாங்க ஆர்சிபி அணி பெரும் தொகையையும் செலவு செய்யலாம் என நினைத்ததை அறிந்த ஐதராபாத் அணி உரிமையாளர் காவ்யா மாறன் முடிந்தவரை அந்த அணியின் ஏலத் தொகையை அதிகரித்தார். இதன் விளைவு சர்வதேச அனுபவம் இல்லாத ஒரு வீரருக்காக ரூ.5 கோடிக்கும் மேல் முதற்கட்டமாக ஏலம் சென்றது.

கடைசியில் ட்விஸ்ட்

கடைசியில் ட்விஸ்ட்

முடிந்தவரை தொகையை அதிகரிக்கும் விதத்தில் ஐதராபாத் அணி தொடர்ந்து போட்டிப்போட்டு ஏலம் கேட்டது. எனினும் இறுதியில் உஷாராக நகர்ந்துக் கொள்ள ஹர்ஷல் பட்டேலை ரூ.10.75 கோடிக்கு ஆர்சிபி அணி ஏலம் எடுத்தது. இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவு என்று தான் கூற வேண்டும்.

கடும் சிக்கல்

கடும் சிக்கல்

கடந்த ஆண்டு 20 லட்சம் எலம் போன ஹர்சல், இம்முறை 10.75 கோடிக்கு வாங்கியுள்ளது. ஒரே வருடத்தில் 20 லட்சத்திலிருந்து 10.75 கோடி ரூபாய் வரை மதிப்பை ஆர்சிபி உயர்த்தி காட்டியுள்ளது. ஏலத்தில் பல்வேறு இளம் பவுலர்கள் குறைந்த தொகைக்கு உள்ளனர். ஆனால் ரூ.10.75 கோடியை செலவிட்டு, பட்ஜெட்டில் பெரும் அடி வாங்கியுள்ளது. இதனால் மற்ற வீரர்களை எடுப்பதில் அந்த அணிக்கு சிக்கல் இருக்கும்.

Story first published: Saturday, February 12, 2022, 18:32 [IST]
Other articles published on Feb 12, 2022
English summary
RCB losses Rs. 10 Crore in IPL mega auction, because of Kavya maran strategy
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+