
ஆர்.சி.பி.யில் சேர முயற்சி?
ஆர்.சி.பி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சி.எஸ். கே. அணிக்காக விளையாடி கொண்டு இருந்தேன் அப்போது எனது நண்பர் ஏபி டி வில்லியர்ஸ், என்னை ஆர்.சி.பி. அணிக்காக விளையாடும் படி கேட்டுக் கொண்டார். அப்போது பெங்களுரு அணியில் சேருவது தொடர்பாக நிறைய பேசினோம்.

நிரப்ப முடியாது
ஆனால், இப்போது அதற்கான நேரம் சரியாக அமையாமல் போய்விட்டது. நான் சேர்ந்த நேரம் தற்போது ஏபி டேவில்லியர்ஸ் கிரிக்கெட்டே விளையாடவில்லை. நாங்கள் இருவரும் சேர்ந்து விளையாட வேண்டும் என்று நினைத்தது நிறைவேறவில்லை. டிவில்லியர்ஸ் இடத்தை என்னால் நிரப்ப முடியாது. அது கஷ்டம்.

நல்ல கேப்டன்
ஆர்சிபி அணியில் மற்ற வீரர்களுடன் நல்லுறவை பேண முயற்சி செய்வேன். இதனிடையே, இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்.சி.பி. இயக்குனர் மைக் ஹேசன், டுபிளஸிஸ் அனைவராலும் மதிக்கப்படும் வீரர். கிரிக்கெட் நுட்பங்கள் எல்லாம் அவருக்கு நன்கு தெரியும். அணியின் வெற்றிக்கு அனைவரின் ஒத்துழைப்பையும் சேர்த்து விளையாடக் கூடிய வீரர் டுபிளஸிஸ்.

கோலி மகிழ்ச்சி
எங்கள் அணியில் முடிவு எடுக்கும் முடிவில் விராட் கோலியும், மேக்ஸ்வெல்லும் இருக்கிறார்கள். மேக்ஸ்வெல் 4வது வீரராக களமிறங்குவார். தினேஷ் கார்த்திக் எங்கள் அணியின் ஃபினிஷராக இருப்பார்.டுபிளஸிஸ் உடன் இணைந்து விளையாடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவர் சிறந்த கேப்டனாக இருப்பார் என்று விராட் கோலி வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











