
முதலில் 6 ரன்கள்
இதற்கு காரணம், பனிப் பொழிவு மற்றும் சிஎஸ்கே வின் மோசமான பந்துவீச்சு ஆகியவை காரணமாக இருக்கலாம். முதல் 5 ஓவரை சிஎஸ்கே அணியின் இளம் வீரரான முகேஷ் சௌத்ரியும், சிம்ரஜித் சிங்கும் வீசினர். முதல் ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே ஆர்சிபி தொடக்க வீரர்கள் அடித்தனர்.

ஸ்விங் ஆகாத பந்து
அதன் பின்னர் விராட் கோலியும், டுபிளஸிசும் அதிரடியை காட்டி , இளம் வீரர்களின் அனுபவம் இல்லாததை நன்கு பயன்படுத்தி கொண்டனர். பந்து நினைத்தபடி ஸ்விங் ஆகவில்லை. முகேஷ் சௌத்ரி இன்ஸ்விங் யாக்கரை தொடர்ந்து விசியதால், இந்த பையன் இப்படி தான் போடுவான் என்பதை தெரிந்து கொண்ட கோலி, டுபிளஸிஸ் அதற்கு ஏற்றார் போல் முன் கூட்டியே நகர்ந்து நின்று சிக்சருக்கும், பவுண்டரிக்கும் அடித்தனர்.

விராட் கோலியின் சிக்ஸ்
இதில் சிம்ரஜித் சிங் பேட்ஸ்மேன்கள் பெரிய ஷாட் அடிப்பதற்கு ஏதுவாக அல்வா சாப்பிடுவது போல் பந்துவீசினார். இதனை பயன்படுத்தி கொண்ட விராட் கோலி கவர் பகுதியில் லாஃப்ட் ஷாட் அடி சிக்சருக்கு பந்தை விரட்டினார். இதனால் கோலி ரசிகர்கள் பழைய கோலி வந்துட்டாரு என்று மகிழ்ச்சியில் இருந்தனர்.
Recommended Video

அதிவேக 50
மறுபுறம் டுபிளஸி அதிரடியை காட்ட ஆர்சிபி அணி 30 பந்துகளிலேயே 50 ரன்களை கடந்தது. இதுக்கு மேல சரிப்பட்டு வராது என நினைத்த தோனி, 2 இளம் வீரர்களையும் நீக்கிவிட்டு சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து போட்டியை நகர்த்தினார். இதனால் ஆர்சிபியின் ரன் குவிப்பு வேகம், கொஞ்சம் குறைந்தது. இறுதியில் டுபிளஸிஸ் 22 பந்தில் 38 ரன்கள் அடித்து மொயின் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.


Click it and Unblock the Notifications











