“டிவில்லியர்ஸின் இடம் அவருக்கு தான்” ஆர்சிபிக்கு கோலி அனுப்பிய அவசர மெசேஜ்? இளம் வீரருக்கு ஜாக்பாட்
பெங்களூரு: ஐபிஎல் ஏலத்தில் எவ்வளவு தொகை கொடுத்தாவது ஒரு இளம் வீரரை எடுக்க வேண்டும் என ஆர்சிபி அணிக்கு விராட் கோலி பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.
Recommended Video
ஐபிஎல் மெகா ஏலம் நெருங்கி வரும் சூழலில் அனைத்து அணிகளும் இறுதிகட்ட பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத ஆர்சிபி அணி பல முக்கிய வீரர்கள் மீது குறிவைத்துள்ளது.

டிவில்லியர்ஸின் இடம்
இனி வரும் ஐபிஎல் தொடர்களில் ஆர்சிபிக்கு பெரிய பிரச்சினை உள்ளது. ஏனென்றால் அந்த அணியின் மிடில் ஆர்டரில் தூணாக இருந்த ஏ.பி.டிவில்லியர்ஸ் ஓய்வை அறிவித்துவிட்டார். எனவே அப்படிபட்ட வீரரின் இடத்தை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஆர்சிபி உள்ளது. இதற்காக தற்போது விராட் கோலியே தகுந்த வீரரை பரிந்துரைத்துள்ளார்.

கோலியின் பரிந்துரை
டிவில்லியர்ஸ் போலவே தென்னாப்பிரிக்கா நாட்டை சேர்ந்த டேவல்ட் ப்ரேவிஸ் எனும் இளம் வீரரை ஏலம் எடுக்க விராட் கோலி பரிந்துரைத்துள்ளார். மெகா ஏலத்தில் எவ்வளவு தொகை செலவளித்தாவது அவரை வாங்கிவிட்டால் நல்லது என எனக்கூறியிருப்பதாகவும் தெரிகிறது. இதற்கு காரணம் அவர் "பேபி ஏபி" என்பதால் தான்.

யார் அந்த ப்ரேவிஸ்
நடைபெற்று வரும் U 19 உலகக்கோப்பை தொடரில் டேவல்ட் ப்ரேவிஸ் கலக்கி வருகிறார். டிவில்லியர்ஸின் தீவிர ரசிகனான அவர் ஒவ்வொரு போட்டியிலும் அடிக்கும் ஷாட்கள் அப்படியே அச்சு அசலாக டிவில்லியர்ஸின் சாயலிலேயே உள்ளது. இதனால் அவரை " பேபி ஏபி டிவில்லியர்ஸ்" என்றே பலரும் அழைத்து வருகின்றனர். இக்கட்டான சூழல்களை சமாளிப்பதிலும் சரி, திறமையிலும் சரி அவர் டிவில்லியர்ஸை போலவே தான்.

தவானின் சாதனையே முறியடிப்பு
U 19 உலகக்கோப்பை தொடரில் ஒரே சீசனில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் தற்போது ப்ரேவிஸ் தான் முதலிடத்தில் உள்ளார். ஷிகர் தவான் அடித்திருந்த 505 என்ற ஸ்கோரை இத்தனை வருடங்களாக யாராலும் நெருங்க முடியவில்லை. ஆனால் தற்போது ப்ரேவிஸ் 506 ரன்கள் குவித்து உலக சாதனை புரிந்துள்ளார்.

டேவல்ட் ப்ரேவிஸ் ஆசை
இதனையடுத்து ஐபிஎல் தொடரில் அவருக்கான மதிப்பு ஏகபோகத்திற்கு எகிறியுள்ளது. ஆர்சிபி அணிக்காக விளையாட வேண்டும் என்பது தான் ப்ரேவிஸின் நீண்ட நாள் ஆசை. அதை நிறைவேற்றிக்கொடுக்க தான் விராட் கோலி தனிப்பட்ட முறையில் பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ப்ரேவிஸுக்கு அடிப்படை தொகையாக ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications