For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“என் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தார்களா..??” அந்த ஒரு விமர்சனம்.. விராட் கோலியின் காட்டமான பதில்!

மும்பை: தன் மீதான ஒரு விமர்சனத்திற்கு மட்டும் விராட் கோலி கடும் கோபத்துடன் பதிலளித்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் டூப்ளசிஸ் தலைமையிலான ஆர்சிபி அணி இந்தாண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளை பெற்றுள்ளது. இன்னும் ஒரு வெற்றி பெற்றால் கூட ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும்.

விராட் கோலி ஃபார்ம்

விராட் கோலி ஃபார்ம்

ஆனால் ஆர்சிபி அணியின் ரசிகர்கள் மட்டும் கவலையில் தான் உள்ளனர். இதற்கு காரணம் விராட் கோலி ஃபார்ம் தான். ஒரே தொடரில் கோலி 3 முறை டக் அவுட்டானதில் இருந்தே அவர் எந்த அளவிற்கு மோசமாக உள்ளார் என்பதை அறியலாம். இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 216 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அவரின் சராசரி 19.64 மட்டுமே ஆகும்.

ஓய்வு விமர்சனங்கள்

ஓய்வு விமர்சனங்கள்

இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த சில வல்லுநர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள், விராட் கோலி தற்போது மன உளைச்சலில் இருக்கிறார். அவரின் செயல்பாடுகள் சரியில்லை. எனவே அவர் சிறிது காலம் ஓய்வெடுத்தால் மட்டுமே மீண்டும் கம்பேக் கொடுக்க முடியும் என விமர்சித்திருந்தனர். இதற்கேற்றார் போல பிசிசிஐ-ம் அவருக்கு ஓய்வு கொடுக்க ஆலோசித்து வருகிறது.

கோலியின் பதில்

கோலியின் பதில்

இந்நிலையில் அதற்கு கோலி தரமான பதிலடி கொடுத்துள்ளார். அதில், விமர்சிப்பவர்கள் எனது ஷூக்குள் இருக்கவில்லை. நான் என்ன உணர்கிறேன், நினைக்கிறேன் என்பதை அவர்களால் உணர முடியாது. எனது வாழ்கையை அவர்கள் வாழ்ந்து பார்க்க முடியாது. அந்த தருணங்கள் எப்படி இருக்கும் என அவர்களுக்கு தெரியாது. இது போன்ற விமர்சனங்கள் வந்தால் நான் தொலைக்காட்சியை சவுண்ட் குறைத்து விடுவேன் எனக்கூறினார்.

புது அனுபவம்

புது அனுபவம்

தொடர்ந்து பேசிய கோலி, எனது பயணத்தில் இதுபோன்று நடந்ததே கிடையாது. 2 முறை தொடர்ந்து டக் அவுட்டாவது, ஃபார்ம் அவுட் என பல விஷயங்களை இந்த சீசனில் பார்க்கிறேன். இந்த விமர்சனங்களை சமாளிப்பது எனக்கு புதிய அனுபவமாக இருப்பது போன்று விராட் கோலி கூறியுள்ளார்.

Story first published: Wednesday, May 11, 2022, 17:27 [IST]
Other articles published on May 11, 2022
English summary
IPL 2022: RCB Player Virat kohli Answers for the criticism of he need to take rest
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+