"இனி அவர் வேண்டாம்" ஆர்சிபியில் வெளியேற்றப்படும் இளம் வீரர்.. கேகேஆர்-க்கு எதிராக புது ப்ளேயிங் 11
மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி இளம் வீரர் ஒருவரை வெளியேற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
6வது லீக் போட்டியாக இன்று ஆர்சிபி - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மும்பை DY பாட்டில் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது.
ஆர்சிபி அணி முதல் போட்டியில் பெற்ற தோல்வி இதே மைதானத்தில் தான் ஆகும். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 205 ரன்கள் அடித்தும், அதனை டிஃபண்ட் செய்ய முடியாமல் தோல்வியடைந்தது.

ஆர்சிபிக்கு நெருக்கடி
கடந்த போட்டியில் செய்த தவறுகளை சரி செய்துக்கொண்டு கொல்கத்தா அணியை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்புடன் ஆர்சிபி களமிறங்குகிறது. இதுமட்டுமல்லாமல், கடந்த சீசனின் ப்ளே ஆஃப் சுற்றில் கொல்கத்தா அணியுடன் தோல்வியடைந்து தான் ஆர்சிபி வெளியேறியது. அதற்கு இன்று பதிலடி கொடுக்க வேண்டும். இதற்காக மிகுந்த கவனத்துடன் ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்துள்ளனர்.

பேட்டிங் வரிசை
பேட்டிங்கை பொறுத்தவரையில் ஆர்சிபி பலமாக உள்ளது. ஓப்பனிங்கில் கேப்டன் டூப்ளசிஸ் - இளம் வீரர் அனுஜ் ராவத் விளையாடுகின்றனர். அனுஜ் கடந்த போட்டியில் 21 ரன்கள் தான் அடித்தார். எனினும் மற்றொரு வாய்ப்பு தரப்படுகிறது. இதன் பின்னர் முதல் விக்கெட்டிற்கு விராட் கோலி, 2வது விக்கெட்டிற்கு தினேஷ் கார்த்திக் ஆகியோர் களமிறங்குகின்றனர். 5வது வீரராக வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் செர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் இருக்கிறார். இவருக்கு கடந்த போட்டியில் பேட்டிங் செய்ய வாய்ப்பு அமையவில்லை. இன்று திறமையை காட்டுவார் என தெரிகிறது.

2 ஸ்பின்னர்கள்
இவருக்கு பின்னர் ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டராக சபாஷ் அகமது களம் காண்கிறார். சுழற்பந்துவீச்சாளரான இவர் கடந்த போட்டியில் பேட்டிங் செய்யவில்லை என்றாலும் பவுலிங்கில் ஒரு ஓவர் வீசி 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். மற்றொரு சுழற்பந்துவீச்சாளராக வானிண்டு அசரங்கா இருக்கிறார்.

வேகப்பந்துவீச்சு
வேகப்பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் டேவிட் வில்லி மீண்டும் வாய்ப்பு பெறவுள்ளார். இந்திய வீரர்களில் முகமது சிராஜ் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் தக்கவைக்கப்படுகின்றனர். ஒரே ஒரு மாற்றமாக ஆகாஷ் தீப்பை மாற்றவுள்ளனர். இவர் கடந்த போட்டியில் 3 ஓவர்களில் 38 ரன்களை வாரி வழங்கினார். எனவே இவருக்கு பதிலாக சித்தார்த் கவுலை கொண்டு வரவுள்ளனர்.

ஆர்சிபி ப்ளேயிங் 11
டூப்ளசிஸ், அனுஜ் ராவத், விராட் கோலி, தினேஷ் கார்த்திக், ரூதர்ஃபோர்ட், சபாஷ் அகமது, வானிண்டு ஹசரங்கா, டேவிட் வில்லி, முகமது சிராஜ், ஹர்ஷல் பட்டேல், சித்தார்த் கவுல்


Click it and Unblock the Notifications