Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பையின் கையில் ஆர்சிபியின் விதி.. ப்ளே ஆஃப் செல்வது கடினம் தான்.. விழிப்பிதுங்கும் டூப்ளசிஸ்!

மும்பை: ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் செல்வதை மும்பை அணி தான் முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் 60 லீக் போட்டிகளை தாண்டி ப்ளே ஆஃப் சுற்றை நெருங்கிவிட்டது.

தற்போது வரை குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்துவிட்டன.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

மீதமுள்ள 3 மற்றும் 4வது இடத்திற்கு தான் அணிகள் இன்னும் மோதி வருகின்றன. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 13 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்று கிட்டத்தட்ட 3வது இடத்தை உறுதி செய்துவிட்டது. 4வது இடத்திற்கு ஆர்சிபி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் கடுமையாக போட்டி போட்டு வருகின்றன.

ப்ளே ஆஃப் சுற்று

ப்ளே ஆஃப் சுற்று

நடப்பு தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி வந்த ஆர்சிபி அணி, 13 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்று 5வது இடத்தில் உள்ளது. டெல்லி அணியும் இதே புள்ளிகளுடன் உள்ள போதும் ரன் ரேட் அடிப்படையில் 4வது இடத்தில் உள்ளது. எனவே டூப்ளசிஸ் தலைமையிலாவது ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் செல்லுமா என்பது சந்தேகத்தில் உள்ளது.

ஆர்சிபிக்கு நெருக்கடி

ஆர்சிபிக்கு நெருக்கடி

இந்நிலையில் ஆர்சிபி அணி மீதமுள்ள ஒரு போட்டியில் வென்றாலும் ப்ளெ ஆஃப் செல்வது கடினம் தான். ஏனென்றால் அதனை உறுதி செய்யப்போவது மும்பையின் கையில் தான் உள்ளது. அதாவது ஆர்சிபி அணி அடுத்ததாக குஜராத் அணியுடன் மோதவுள்ளது இதில் அதிக ரன் ரேட்டுடன் வெற்றி பெற வேண்டும்.

Recommended Video

India All-Format கிரிக்கெட் போட்டியிலும் Thilak Varma விரைவில் - Rohit | OneindiaTamil
கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு

டெல்லி கேப்பிடல்ஸ் அணி வரும் 21ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றால் மட்டும் தான் புள்ளிகள் அடிப்படையிலேயே ஆர்சிபி ப்ளே ஆஃப் செல்லும். இல்லையென்றால் இரு அணிகளும் 16 புள்ளிகள் பெற்று, ரன் ரேட் அடிப்படையில் டெல்லி ப்ளே ஆஃப் சென்றுவிடும்.

Story first published: Tuesday, May 17, 2022, 11:29 [IST]
Other articles published on May 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+