Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆர்சிபி கேப்டனாக மாறிய விராட் கோலி.. ஒரே ஒரு ரிவியூ மூலம் மாறிய ஆட்டம்.. லக்னோ அதிர்ச்சி தோல்வி

மும்பை: ஐபிஎல் தொடரின் 31வது லீக் ஆட்டத்தில் லக்னோ அணியை வீழ்த்தி பெங்களூரு அணி 5வது வெற்றியை பதிவு செய்தது.

இந்த ஆட்டத்தில் பாதியில் ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டார். இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கேஎல் ராகுல் பந்துவீசுவதாக அறிவித்தார்.

இரு அணிகளும் பிளேயிங் லெவனில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்ற நினைத்த ஆர்சிபி வீரர்களுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

கோல்டன் டக்

கோல்டன் டக்

ஆர்சிபி வீரர் அனுஜ் ராவத் 4 ரன்கள் எடுத்திருந்த போது ஷமிரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய விராட் கோலி முதல் பந்திலேயே சமிரா ஓவரில் கோல்டன் டக் ஆனார். இதனால் ஆர்சிபி 7 ரன்களுக்கு 2 விக்கெட் எடுத்து தடுமாறியது, இதன் பின்னர் களத்துக்கு வந்த மேக்ஸ்வெல் வழக்கம் போல் அதிரடியாக விளையாடி 11 பந்துகளில் 23 ரன்கள் விளாசி குர்னல் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

டுபிளஸில் 96

டுபிளஸில் 96

ஒரு முனையில் விக்கெட் வீழ்ந்தாலும் , மறு முனையில் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் டுபிளஸிஸ் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தார். இந்த நிலையில், பிரபுதேசாய் 10 ரன்களிலும், சபாஷ் அகமது 22 பந்தில் 26 ரன்களும் ஆட்டமிழக்க, பிளஸில் ருத்ரதாண்டவம் ஆடினார். 11 பவுண்டரிகளையும், 2 சிக்சர்களையும் பறக்கவிட்ட அவர் 64 பந்துகளில் 96 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இறுதியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 8 பந்தில் ஒரு சிக்சருடன் 13 ரன்களை குவித்தார். இதனால், ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.

ராகுல் சாதனை

ராகுல் சாதனை

182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ களமிறங்கியது. டிகாக் 3 ரன்கள், மணிஷ் பாண்டே 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய கேப்டன் ராகுல் 30 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் டி20 போட்டியில் அதிவேகமாக 6 ஆயிரம் ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். ராகுல் 30 ரன்கள் எடுத்திருந்த போது சிறப்பான ரிவியூ மூலம் ஹர்சல் பந்தில் ஆட்டமிழந்தார்.

அசத்தல் வெற்றி

அசத்தல் வெற்றி

இதன் பின்னர் குர்னல் பாண்டியா அதிரடி காட்டினார். 28 பந்துகளில் 42 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பதோனி 13 ரன்களும், ஸ்டோனிஸ் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, லக்னோ அணி 163 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது. ஆர்சிபி வீரர் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.

Story first published: Tuesday, April 19, 2022, 23:55 [IST]
Other articles published on Apr 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+