
தொடக்க வீரர்கள்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயர், இன்றைய ஆட்டத்தில் 10 ரன்கள் எடுத்திருந்த போது ஆகாஷ் தீப் பந்துவீச்சில் அவரிடமே பிடிப்பட்டார். மறுமுனையில் நின்ற ரஹானேவும் சொற்ப ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் பெவிலியன் நோக்கி நடையை கட்டினார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 13 ரன்கள் எடுத்திருந்த போது அவர் ஹசரங்கா பந்துவீச்சில் நடையை கட்டினார். விக்கெட் வீழ்கிறது என தெரிந்தும் அதிரடியாக ஆட முற்பட்ட நிதிஷ்ரானா 5 பந்துகளில் 10 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

ஹசரங்கா வேட்டை
பவுண்டரி, சிக்ஸ் என இன்னிங்சை சுனில் நரைன் தொடங்கியதும் கேகேஆர் ரசிகர்கள் கொஞ்சம் தெம்பாக உட்கார, அடுத்த சில பந்துகளில் அவரது விக்கெட்டையும் ஹசரங்கா வீழ்த்தினார். கொல்கத்தா அணி 83 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் கொஞ்சம் ரஸில் அதிரடி காட்ட, அவரையும் 25 ரன்களில் ஆர்சிபி வீரர்கள் தட்டி தூக்கினர். இறுதியில் கேகேஆர் அணி 18.5வது ஓவரில் 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அடுத்தடுத்து விக்கெட்
இதனையடுத்து களமிறங்கிய கேகேஆர் வேகப்பந்துவீச்சாளர்கள் தக்க பதிலடி தந்தனர். உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரை கண்டதுமே ஆர்சிபி வீரர்கள் பதறி போக, ஆட்டத்தின் 3வது பந்திலேயே ஆர்சிபியின் தொடக்க வீரர் அனுஜ் ராவத் டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் பின்னர் அடுத்த ஓவரின் கடைசி பந்தில் ஆர்சிபி கேப்டன் டுபிளஸி விக்கெட்டை டிம் செளதி கழற்றினார். இதனால் பெரும் நெருக்கடி ஆர்சிபி அணிக்கு ஏற்பட்டது. இதனால் விராட் கோலி காப்பாற்றுவார் என நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விராட் கோலியின் வழக்கமான குறையை வைத்தே காலி செய்தார் உமேஷ் யாதவ்.

திருப்புமுனை
இதனைத் தொடர்ந்து ஷாபாஷ் அகமது, ருதர்ஃபோர்ட் ஆகியோர் சின்ன பார்ட்னர்ஷிப் போட்டு அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் டிம் சௌதி பந்துவீச்சில் ஆட்டமிழக்க மீண்டும் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. 19வது ஓவரில் ரன் அவுட் வாய்ப்பு கிடைத்தது. தினேஷ் கார்த்திக்கும், ர்சல் பட்டேலும் ஒரு முனையில் ஓடி வந்து நிற்க அப்போது கேகேஆர் வீரர் உமேண் யாதவ் பந்தை சரியாக த்ரோ செய்யாமல் விட்டார். இதனையடுத்து, எளிதாக கார்த்திக், ஹர்சல் ஜோடி பெங்களூரு அணியின் வெற்றியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.


Click it and Unblock the Notifications











