Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அது மட்டும் மாறவே இல்ல.. ஆர்சிபியில் நீடிக்கும் 3 முக்கிய பிரச்சினை.. பஞ்சாப் அணியிடம் தோற்றது ஏன்!!

மும்பை: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி தோல்வியடைந்ததற்கு 3 பெரும் தவறுகளே காரணமாக அமைந்தது. அதுவும் பழைய ஆர்சிபி செய்யும் தவறு தான்.

இரு அணிகளும் மோதிய போட்டி நேற்று மும்பை DY பாட்டில் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணியின் ஒவ்வொரு பேட்ஸ்மேனும் தூள் கிளப்பினர்.

 இமாலய டார்கெட்

இமாலய டார்கெட்

அந்த அணியின் தொடக்க வீரராக் களமிறங்கிய கேப்டன் டூப்ளசிஸ் 57 பந்துகளில் 88 ரன்களும், அனுஜ் ராவத் 21 ரன்களும் சேர்த்தனர். இதன் பின்னர் வந்த விராட் கோலி ( 41 ), தினேஷ் கார்த்திக் 32 ரன்கள் என பவுண்டரிகளை பறக்கவிட்டு அசத்தினர். இதனல அந்த அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 205 ரன்களை குவித்தது.

ஏமாற்றமே மிச்சம்

ஏமாற்றமே மிச்சம்

இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி எப்படியும் வெற்றி பெறாது என்று தான் நினைத்தனர். டூப்ளசிஸ் கேப்டனாக இருப்பதால் ரன்ரேட்டை கட்டுப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அப்படி நினைத்தது தான் பெரிய தவறு. பஞ்சாப் அணியில் கேப்டன் மயங்க் அகர்வால் (32), ஷிகர் தவான் ( 43 ) பனுக்கா ராஜபக்சா ( 43 ) என சிறப்பாக ஆடி நல்ல அடித்தளம் அமைத்தனர்.

பஞ்சாப் அபார வெற்றி

பஞ்சாப் அபார வெற்றி

எனினும் இடையில் ஆர்சிபிக்கான வெற்றி வாய்ப்பு இருந்தது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் லிவிங்ஸ்டன் (19) மற்றும் ராஜ் பவா (0) என அதிர்ச்சி கொடுத்ததால் பஞ்சாப் அணி 156 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்படியாவது ரன்களை கட்டுப்படுத்தியிருக்கலாம். ஆனால் அங்கும் கோட்டையை விட்டனர். 6 விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஷாருக்கான் (24), ஒடியன் ஸ்மித் (25) ஜோடி ஆர்சிபி பவுலிங்கை விளாசித் தள்ளினர். .

ஆர்சிபியின் முக்கிய தவறு

ஆர்சிபியின் முக்கிய தவறு

ஆர்சிபியின் இந்த தோல்விக்கு 3 முக்கிய தவறுகள் தான் காரணம். ஆர்சிபி அணிக்கு 2வதாக பவுலிங் செய்யும் எப்போதுமே ஒரு பதற்றம் இருக்கும். அது இன்னும் மாறவே இல்லை. நேற்றைய போட்டியில் மொத்தமாக 21 வைட் பந்துகள் போட்டனர். இது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

2வது பிரச்சினை

2வது பிரச்சினை

பஞ்சாப் வீரர் ஒடியன் ஸ்மித் கடைசியில் 8 பந்துகளில் 25 ரன்கள் அடித்தது தான் திருப்புமுனையாக இருந்தது. ஆனால் ஒடியன் ஸ்மித் 1 ரன் அடித்திருந்த போதே, அழகான கேட்ச் ஒன்றை கொடுத்தார். ஆனால் ஆர்சிபி இளம் வீரர் ஹர்ஷல் பட்டேல் அதனை பிடிக்கவில்லை. பதற்றத்தில் விட்டுவிட்டார். சரி.. இதன் பின்னர் ரன் அவுட் வாய்ப்பையும் வாரி வழங்கினார். ஆனால் அதனையும் ஆர்சிபி மிக மோசமாக சொதப்பியது.

புலம்பி தள்ளும் ரசிகர்கள்

புலம்பி தள்ளும் ரசிகர்கள்

அணியில் பல வீரர்கள் புதிதாக வந்துள்ளனர், கேப்டன் மாற்றப்பட்டுள்ளார். அப்படி இருந்தும் 2வது இன்னிங்ஸில் ஆர்சிபியிடம் ஏன் இந்த தவறு நடக்கிறது என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். மேலும் 21 வைட் பந்துகள், முக்கிய கேட்சை விடுவது, ரன் அவுட்டை விடுவது என இருந்தால் 260 ரன்களை கூட எளிதாக விரட்டிவிடுவார்கள் என கிண்டலடித்தும் வருகிறார்கள்.

Story first published: Monday, March 28, 2022, 21:57 [IST]
Other articles published on Mar 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+