ரோகித் பர்த்டேக்கு கோலியின் ட்ரீட்.. ஒவ்வொரு ஷாட்டும் வேற ரகம்.. குஜராத்துக்கு சவால் அளித்த ஆர்சிபி
பெங்களூரு: இன்று பிறந்தநாள் ரோகித் சர்மாவுக்காக இருக்கலாம். ஆனால் டிரிட் வைத்தது என்னவோ விராட் கோலி தான்.
நடப்பு ஐபிஎல் சீசனில் சொதப்பிய விராட் கோலி, இன்று தனது பேட் மூலம் அரைசதம் அடித்து பதிலடி தந்துள்ளார்.
மும்பை பார்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் செய்தது. ஆர்சிபி அணியில் மஹிபால் லோம்ரர் ஆர்சிபி அணியில் விளையாடினார்.

டுபிளஸிஸ் டக் அவுட்
தொடக்க வீரராக கோலியும், டுபிளஸிசும் களமிறங்கினர். 4 ஆண்டுகளுக்கு பிறகு முதல் ஆட்டத்தில் பிரதீப் சங்வன் ஐபிஎல் போட்டியில் களமிறகினார். டுபிளஸிஸ் சங்வான் பந்துவீச்சில் டக் அவுட்டானார். இதனையடுத்து கோலியுடன் ரஜித் பட்டிடார் ஜோடி சேர்ந்து பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

அடுத்தடுத்து அரைசதம்
ஒருபுறம் கோலி பொறமையாக விளையாட பட்டிடார் அதிரடியாக ஆடி 32 பந்துகளில் 52 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கோலி தனது அசத்தலான ஷாட்களால் அரைசதம் அடித்தார். எனினும், தனது ஸ்கோபர் அடிக்கும் வேகத்தை உயர்த்தும் முனைப்பில் 58 ரன்களில் கோலி ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பெங்களூரு 170 ரன்கள்
இருப்பினும் அதிரடி வீரர் மேக்ஸ்வெல் இம்முறை அபாரமாக விளையாடினார். 18 பந்துகளில் 33 ரன்களை மேக்ஸ்வெல் விளாசினார். இதில் 3 பவுண்டரியும், 2 சிக்சரும் அடங்கும். மபுல் லோம்ரர் 8 பந்துகளில் 16 ரன்கள் விளாசினார். இதனால் 150 ரன்கள் மட்டுமே அடித்திருக்க வேண்டிய ஆர்சிபி 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை எடுத்தது.

சங்வான் அபாரம்
பிரதீப் சங்வான் 4 ஓவர்களை வீசி 19 ரன்களை விட்டு கொடுத்து அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி வீரர்கள் விளையாடி வருகின்றனர். இந்தப் போட்டியில் குஜராத் வென்றால் 16 புள்ளிகள் பெற்று கிட்டதட்ட பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.


Click it and Unblock the Notifications