ஓரே ஓவரில் 3 விக்கெட்.. தோனியின் மாஸ்டர் மூவ்.. 200 ரன்கள் செல்ல வேண்டிய ஆர்சிபியை தடுத்த சிஎஸ்கே
மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் சிஎஸ்கேக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணி 174 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
புனேவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மிட்செல் சாண்டனருககு பதிலாக மொயின் அலி பிளேயிங் லெவனில் இடம்பெற்றார்.
தொடக்க வீரராக களமிறங்கிய கோலி, டுபிளஸிஸ் ஜோடி முதல் ஓவரில் 6 ரன்கள் மட்டுமே அடித்தது

ஸ்விங் ஆகாத பந்து
அதன் பின்னர் விராட் கோலியும், டுபிளஸிசும் அதிரடியை காட்டி , இளம் வீரர்களின் அனுபவம் இல்லாததை நன்கு பயன்படுத்தி கொண்டனர். குறிப்பாக சிம்ரஜித் சிங் ஓவரில் விராட் கோலி கவர் பகுதியில் லாஃப்ட் ஷாட் அடி சிக்சருக்கு பந்தை விரட்டினார். மறுபுறம் டுபிளஸி அதிரடியை காட்ட ஆர்சிபி அணி 30 பந்துகளிலேயே 50 ரன்களை கடந்தது.

தோனியின் மாஸ்டர் பிளான்
இதுக்கு மேல சரிப்பட்டு வராது என நினைத்த தோனி, 2 இளம் வீரர்களையும் நீக்கிவிட்டு சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து போட்டியை நகர்த்தினார். இதனால் ஆர்சிபியின் ரன் குவிப்பு வேகம், கொஞ்சம் குறைந்தது. இறுதியில் டுபிளஸிஸ் 22 பந்தில் 38 ரன்கள் அடித்து மொயின் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ரன்அவுட்
மறுபுறம் ஜடேஜாவும் கட்டுக்கோப்பாக பந்துவீச ஆர்சிபி வீரர்களுக்கு நெருக்கடி அதிகரித்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெக்ஸ்வேல் 3 ரன்களில் ரன் அவுட் ஆனார். அதன் பின்னர் மொயின் அலி வீசிய பந்தை கணிக்க தவறிய விராட் கோலி போல்ட் ஆனார். ஒரு பக்கம் ஜடேஜா கட்டுக்கோப்பாக பந்துவீசி ஆர்சிபியின் ரன் குவிப்பு வேகத்திற்கு பிரேக் போட்டார்.
Recommended Video

ஓரே ஓவரில் 3 விக்கெட்
இருப்பினும் இளம் வீரர் லோம்ரர் அதிரடியாக ஆடி 27 பந்துகளில் 42 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பிரிட்டோரியஸ் வீசிய 18வது ஓவரில் மட்டும் 18 ரன்கள் சென்றது. இதன் பின்னர் தீக்சனா வீசிய 19வது ஓவரில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்ந்தது. இறுதியில் தினேஷ் கார்த்திக் கடைசி ஓவரில் 2 சிக்சரை பறக்கவிட, ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது.


Click it and Unblock the Notifications