
அமெரிக்க வாய்ப்பு
ஆனால் உள்ளூர் போட்டியில் நன்றாக விளையாடுகிறார் என்பதை அறிந்த ஐபிஎல் அணிகள் அவரை 2010, 11ஆம் ஆண்டே ஏலத்தில் எடுத்தது. ஆனால் ஒரு போட்டியில் கூட விளையாட் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்துடன் அமெரிக்காவில் சென்று விளையாட ஹர்சலுக்கு வாய்ப்பு கிடைத்தது.

இடம் கிடைக்காது
எனினும் அந்த வாய்ப்பை உதறிவிட்டு தொடர்ந்து ரஞ்சி போட்டியில் விளையாடினார். 2019 ரஞ்சி சீசன் போட்டியில் 52 விக்கெட்டுகளை வீழ்த்தி , ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை ஹர்சல் பட்டேல் படைத்தார். இதனையடுத்து அவருக்கு ஐபிஎல் தொடரில் பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்பு கிடைத்தது.

அனைத்தும் கிடைத்தது
இதன் பின்னர் 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தி ஹர்சல் பட்டேல் பர்பிள் கேப்பை வென்றார். இதனால் இந்திய அணியில் விளையாட ஹர்சல் பட்டேலுக்கு வாய்ப்பு கிடைத்தது. நேற்று கூட ஐபிஎல் தொடரில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி விளையாடியது. அப்போது மும்பை அணி பவர்பிளேவில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்தது. ஆனால், அதே மும்பை அணி 62 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதற்கு முக்கிய காரணம், ஹர்சல் பட்டேல் தான்.

சிறப்பான ஆட்டம்
அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மாவை ஹர்சல் பட்டேல் வீழ்த்தினார். 4 ஓவரில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி 23 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து ஆர்சிபி அணிக்கு பெரிய வெற்றியை தேடி தந்தார். ஆனால் அந்த வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போதே ஹர்சல் பட்டேலுக்கு ஒரு சோக செய்தி வந்து சேர்ந்தது.

அதிர்ச்சி செய்தி
ஹர்சல் பட்டேலின் உடன் பிறந்த சகோதரி உயிரிழந்துவிட்டதாக தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. இதனால் உடைந்து போன ஹர்சல் பட்டேல், உடனடியாக பயோ பபுளிலிருந்து விலகி தனது சகோதரியின் இறுதி சடங்கில் பங்கேற்க சென்றுள்ளார். இதனால் ஹர்சல் பட்டேல் சிஎஸ்கேவுக்கு எதிரான அடுத்த போட்டியில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. ஹர்சல் பட்டேலுக்கு ஆர்சிபி அணி வீரர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











