Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 பெரும் ஏமாற்றங்கள்.. சங்கடத்தில் ஆர்சிபி அணி.. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தொடக்கமே தலைவலி!!

மும்பை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் ஏமாற்றத்துடன் ஆர்சிபி அணி களமிறங்கியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 13வது லீக் போட்டியில் இன்று ராஜஸ்தான் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூப்ளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அணி மாற்றங்கள்

அணி மாற்றங்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசனில் 2 போட்டிகளில் விளையாடி, இரண்டிலுமே வெற்றி பெற்றுள்ளது. ஆர்சிபி அணி முதல் போட்டியில் தோல்வியடைந்த போதும், 2வது போட்டியில் அதிரடி கம்பேக் தந்தது. எனவே இந்த போட்டியிலும் அதே ப்ளேயிங் 11 உடன் களமிறங்குவதாக டூப்ளசிஸ் அறிவித்துள்ளார்.

முதல் சரிவு

முதல் சரிவு

எனினும் ஆர்சிபிக்கு 2 பெரும் ஏமாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஆர்சிபி அணியின் மிடில் ஆர்டர் தூணாக பார்க்கப்படும் க்ளென் மேக்ஸ்வெல் இந்தியாவுக்கு வந்துவிட்டார். எனினும் அவர் இன்று விளையாடவில்லை. ஏப்ரல் 6ம் தேதிவரை ஆஸ்திரேலிய வீரர்கள் விளையாடக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இது ஆர்சிபிக்கு பின்னடைவாகும்.

2வது பின்னடைவு

2வது பின்னடைவு

மற்றொரு ஏமாற்றம் என்னவென்றால், ஆர்சிபி அணியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த யுவேந்திர சாஹல் இன்று முதல் முறையாக ஆர்சிபி அணிக்கு எதிராக பவுலிங் வீசவுள்ளார். அவர் ஆர்சிபிக்காக 113 போட்டிகளில் ஆடியுள்ளார். இதனால் ஒவ்வொரு வியூகத்தையும் அறிந்தவர் ஆவார். இது ஆர்சிபிக்கு தலைவலியை கொடுக்கும்.

வெற்றி வாய்ப்பு என்ன

வெற்றி வாய்ப்பு என்ன

இப்படி 2 பின்னடைவுகள் இருக்கும் போதிலும் ஆர்சிபியின் வெற்றி வாய்ப்பு சற்று பிரகாசமாக தான் உள்ளது. ஏனென்றால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான கடைசி 5 போட்டிகளில் ஆர்சிபி ஒருமுறை கூட தோல்வியடையவில்லை. 4 வெற்றிகள் மட்டும் ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. இதனால் இன்றும் நம்பிக்கையுடன் ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்சிபி ப்ளேயிங் 11

ஆர்சிபி ப்ளேயிங் 11

டூப்ளசிஸ், அனுஜ் ராவத், விராட் கோலி, தினேஷ் கார்த்திக், செர்ஃபேன் ரூத்ர்ஃபோர்ட், சபாஷ் அகமது, வானிண்டு ஹசரங்கா, டேவிட் வில்லி, ஹர்ஷல் பட்டேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்

ராஜஸ்தான் ப்ளேயிங்11

ராஜஸ்தான் ப்ளேயிங்11

ஜாஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஷ்வால், தேவ்தத் பட்டிக்கல், சஞ்சு சாம்சன், சிம்ரான் ஹெட்மெயர், ரியான் பராக், அஸ்வின், நவ்தீப் சைனி, ட்ரெண்ட் போல்ட், பிரஷித் கிருஷ்ணா, யுவேந்திர சாஹல்

Story first published: Tuesday, April 5, 2022, 19:39 [IST]
Other articles published on Apr 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+