Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே நேரத்தில் 3 பிரச்சினை.. சோதனையில் சிக்கித்தவிக்கும் டூப்ளசிஸ்.. கைக்கொடுப்பாரா விராட் கோலி?

மும்பை: 2 அணிகளை ப்ளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேற்றும் கட்டாயத்தில் இன்று ஆர்சிபி அணி தயாராகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 67வது லீக் போட்டியில் இன்று ஆர்சிபி மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இன்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணி ஏற்கனவே 10 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்துவிட்டது.

 ஆர்சிபி அணி பிரச்சினை

ஆர்சிபி அணி பிரச்சினை

ஆனால் ஆர்சிபி அணிக்குதான் தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டுள்ளது. இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி அணி 14 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் ஆர்சிபி அணி கிட்டத்தட்ட ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிடும். ஒருவேளை தோற்றுவிட்டால் ஒரு இடத்திற்காக 4 அணிகள் மோதும் சூழல் உருவாகும்.

2 அணிகள் வெளியேறலாம்

2 அணிகள் வெளியேறலாம்

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் உள்ளன. ஒருவேளை ஆர்சிபி அணி இன்று தோல்வியடைந்து, இந்த இரண்டு அணிகளும் மீதமுள்ள போட்டியில் வெற்றி பெற்றிவிட்டால் ரன்ரேட் அடிப்படையில் உள்ளே நுழைய வாய்ப்புள்ளது. எனவே ஆர்சிபி இன்று வெற்றி பெற்றுவிட்டால் இந்த இரண்டு அணிகளுமே ப்ளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறிவிடும்.

கடைசி கண்டம்

கடைசி கண்டம்

இந்த கண்டத்தை தாண்டினாலும், ஆர்சிப்பிக்கு மற்றொரு தலைவலி உள்ளது. அதாவது டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் ஆர்சிபியை போன்றே 13 போட்டிகளில் 14 புள்ளிகளை பெற்றுள்ளது. மீதமுள்ள போட்டியில் டெல்லி தோல்வியடைந்தால் தான் ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் பிரகாசமாகும். ஒருவேளை வென்றுவிட்டால், ரன் ரேடி அடிப்படையில் உள்ளே நுழைந்துவிடும். எனவே ஆர்சிபி அணி இன்று அதிக ரன்ரேட்டுடன் வெற்றி பெற வேண்டியது அவசியம்.

இன்று பெரும் திருப்பம்

இன்று பெரும் திருப்பம்

இன்றைய போட்டி கிட்டத்தட்ட யார் அந்த 4வது இடத்தை பிடிக்கப்போவது என்பது தெரிந்துவிடும். மீதமுள்ள முதல் 3 இடங்களை குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் உறுதி செய்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, May 19, 2022, 15:12 [IST]
Other articles published on May 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+