வாழ்வா? சாவா? போட்டி.. ஐபிஎல்-ல் இன்று 3வது அணி வெளியேற்றம்.. ஆர்சிபி அணிக்கு வந்த தலைவலி!
மும்பை: ஐபிஎல் தொடரில் இருந்து மற்றொரு அணி வெளியேறப்போகும் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் 60வது லீக் போட்டியில் இன்று ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற வாழ்வா? சாவா? கட்டத்தில் இரு அணிகளுமே உள்ளன.

ப்ளே ஆஃப் வாய்ப்பு
டூப்ளசிஸ் தலைமையிலான ஆர்சிபி அணி இதுவரை 12 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அந்த அணி இனி உள்ள 2 போட்டிகளில் இரண்டிலுமே வெற்றி பெற்றால் தான் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய முடியும். ஏனென்றால் அந்த அளவிற்கு கடும் போட்டிகள் உள்ளன.

நிர்பந்தத்தில் ஆர்சிபி
இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் ஆர்சிபி அணி 2வது இடத்திற்கு கூட முன்னேறலாம். ஆனால் அதற்கு ஒரு சிக்கல் உள்ளது. முதலில் பேட்டிங் செய்து 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டும். அல்லது இலக்கை 5 - 6 ஓவர்களில் விரட்டி வெற்றி பெற வேண்டும். இப்படி நடந்தால் அதிக ரன்ரேட்டுடன் லக்னோ அணியை வீழ்த்தி 2வது இடம் பிடிக்கலாம்.

பஞ்சாப் அணிக்கு சிக்கல்
மற்றொருபுறம் பஞ்சாப் அணி 11 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. அந்த அணி இனி வரும் 3 போட்டிகளிலுமே வெற்றி பெற்றால் மட்டுமே குறைந்தபட்சம் 16 புள்ளிகளை பெற்று ப்ளே ஆஃப் செல்ல முடியும். ஒன்றில் தோற்றால் கூட வெளியேறிவிடும். எனவே இன்று வாழ்வா? சாவா? போட்டி தான்.
Recommended Video

இரு அணிகளின் பலவீனம்
ஆர்சிபி அணியில் கோலியை தவிர்த்து மற்ற அனைவரும் ஃபார்முக்கு திரும்பிவிட்டனர். பவுலிங்கும் ஹாசல்வுட், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ் என பலமாக உள்ளது. மற்றொரு புறம் பஞ்சாப் அணி நிலையான ஃபார்ம் இன்றி உள்ளது. நடப்பு தொடரில் ஒருமுறை கூட தொடர்ச்சியாக 2 போட்டிகளில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications