IPL - ஆர்சிபி Vs பஞ்சாப் : விராட் கோலியை ஏமாற்றிய டுபிளஸிஸ்.. முதல் போட்டியிலேயே மோதலா?
மும்பை: ஐபிஎல் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், பெங்களூரு அணியும் மோதி வருகின்றன.
Recommended Video
இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்தவீச்சை தேர்வு செய்தது. இரு அணிகளும் புதிய கேப்டன்களுடன் களமிறங்கி உள்ளனர்.
வெற்றியுடன் புதிய அத்தியாத்தை தொடக்க வேண்டும் என்று மாயங் அகர்வாலும், டுபிளஸிசும் களத்துக்கு இறங்கியுள்ளனர்.

பேட்டிங் வரிசை மாற்றம்
ஆர்சிபி அணியின் கேப்டனான டுபிளஸிஸ் அணியில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். முதல் பணியாகவே ஓபனிங் வீரராக ஐபிஎல் தொடரில் அடிக்கடி களமிறங்கும் விராட் கோலிக்கு, அவரது பேட்டிங் வரிசையை மாற்றிவிட்டார். இதனால் பழைய படியே கோலி 3வது வீரராக களமிறங்கி உள்ளார்.

அணிக்கு தேவை
இதனால் விராட் கோலி ஏமாற்றம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அணியின் சீனியர் வீரர் என்பதால் தமது இடத்தை புதிய கேப்டன் மாற்றமாட்டார் என்று விராட் கோலி நினைத்தார்.ஆனால் டுபிளஸியின் இந்த முடிவை கோலி எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் டுபிளஸிஸ் அணியின் தேவையை உணர்ந்தே கோலியை 3வது வீரராக களமிறங்க அறிவுறுத்தினார்.

காரணம் என்ன?
இதற்கு காரணம் ஆர்சிபியின் ரன் ரேட் 7வது ஓவரிலிருந்து 16 வது ஓவர் வரை கடந்த சீசனில் வெறும் 7.8 என இருந்தது. இதனால் கோலி இந்திய அணிக்கு விளையாடுவது போல் 3வது வீரராக களமிறங்கினால் ஆட்டத்தின் மிடில் ஓவர்களில் பெங்களூரு அணியின் ரன்ரேட் உயரும். ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி பவர்பிளேவில் இதுவரை 1688 பந்துகளை எதிர்கொண்டு 1965 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதாவது ஸ்ட்ரைக் ரேட் வெறும் 114 தான்.

கோலி ஸ்ட்ரைக்ரேட்
இதில் கோலி பவர்பிளேவில் எதிர்கொண்ட பந்துகளில் 44 சதவீதம் டாட் பால். இதுவே ஆட்டத்தின் நடுபகுதியில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 140 என்ற அளவில் உள்ளது. மேலும் மேக்ஸ்வெலும் இல்லாததால் ஆர்சிபி அணியில் கோலி போன்ற அனுபவ வீரர் நடுவரிசையில் தேவை. டுபிளஸிஸ் முடிவு சரியானது தான் ஆனால் கோலி இதனை ஏற்று கொள்வாரா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications