For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“இன்னைக்கு விருந்து ரெடி”.. ஆர்சிபி vs பஞ்சாப் போட்டி.. வாழ்வா? சாவா? கட்டத்தில் பெரும் மோதல்?

மும்பை: ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் வாழ்வா? சாவா? என்ற கட்டத்தில் இன்று முக்கிய போட்டியில் மோதியுள்ளன.

ஐபிஎல் தொடரின் 60வது லீக் போட்டியாக நடைபெறும் இந்த மோதல் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் தொடங்கியுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆர்சிபி அணி கேப்டன் டூப்ளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ஹங்கர்கேகருக்கு சிஎஸ்கே கொடுத்த கௌரவம்.. பெரிய அந்தஸ்தை காப்பாற்றுவாரா? வேற லெவல் லக்ஹங்கர்கேகருக்கு சிஎஸ்கே கொடுத்த கௌரவம்.. பெரிய அந்தஸ்தை காப்பாற்றுவாரா? வேற லெவல் லக்

முக்கியமான போட்டி

முக்கியமான போட்டி

ஆர்சிபி அணி இதுவரை 12 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளிலும் வென்றால் தான் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய முடியும். ஏனென்றால் அந்த அளவிற்கு கடும் போட்டிகள் உள்ளன. சரியாக 16 புள்ளிகளை பெற்றாலும் கூட ரன் ரேட் அடிப்படையில் உள்ளே நுழைய மற்ற அணிகள் ஆவலுடன் உள்ளன.

ஆர்சிபி மாற்றம்

ஆர்சிபி மாற்றம்

இதற்காக ஆர்சிபி அணி இந்த முறை எந்த மாற்றமும் செய்யாமல் களமிறங்கியுள்ளது. கடைசியாக நடைபெற்ற சிஎஸ்கே, ஐதராபாத் போட்டிகளில் இந்த ப்ளேயிங் 11 சிறப்பாக இருந்தது. எனவே அதே காம்போவுடன் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய டூப்ளசிஸ் களமிறங்கியுள்ளார். விராட் கோலி இன்று ஜொலிப்பாரா என்ற எதிர்பார்ப்பு மட்டுமே ரசிகர்களிடம் உள்ளது.

பஞ்சாப் அணி வாய்ப்பு

பஞ்சாப் அணி வாய்ப்பு

மற்றொருபுறம் பஞ்சாப் அணிக்கு இதுதான் கடைசி வாய்ப்பாகும். இதுவரை 12 போட்டிகளில் ஆடியுள்ள அந்த அணி 10 புள்ளிகள் தான் பெற்றுள்ளது. எனவே மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வென்றால் தான் ப்ளே ஆஃப் கதவை தட்ட முடியும். எனவே இதற்காக இன்று கடும் போராட்டத்தில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிக்ஸர் மழை ரெடி

சிக்ஸர் மழை ரெடி

பிராபோர்ன் மைதானத்தின் பிட்ச் பேட்டிங்கிற்கு பெரும் அளவில் உதவும் வகையில் உள்ளது. முதல் இன்னிங்ஸில் இங்கு 180 ரன்கள் வரை சராசரியாக வரும் என தெரிவித்துள்ளனர். கடந்த சில போட்டிகளாகவே குறைந்த ஸ்கோர் போட்டியை பார்த்து வந்த ரசிகர்கள் இன்று பல சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளை போட்டியில் காணலாம்.

ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

ஆர்சிபி : விராட் கோலி, டூப்ளசிஸ், ராஜத் பட்டிதர், க்ளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், மஹிபால் லாம்ரோர், சபாஷ் அகமது, வானிண்டு ஹசரங்கா, ஹர்ஷல் பட்டேல், முகமது ஷமி, ஜோஸ் ஹாசல்வுட்

பஞ்சாப் : ஜானி பேர்ஸ்டோ, ஷிகர் தவான், பனுக்கா ராஜபக்ச, மயங்க் அகர்வால், ஜித்தேன் ஷர்மா, லியாம் லிவிங்ஸ்டன், ரிஷி தவான், ரபாடா, ராகுல் சஹார், ஹர்ப்ரீத் ப்ரார், அர்ஷ்தீப் சிங்

Story first published: Friday, May 13, 2022, 20:23 [IST]
Other articles published on May 13, 2022
English summary
IPl 2022: RCB vs PBKS Fights for the Hope for Playoff, Duplessis won the toss
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X