For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்க குருபாய் ஒருத்தர் தான்.. பேட்டிங்கில் மாஸ் காட்டிய ரஸில்.. அதிரடி இன்னிங்சின் பின்னணி என்ன?

மும்பை: ஐபிஎல் தொடரின் 15வது சீசனில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் ரஸில் 31 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார்.

காயம், உடல் தகுதியில் பின்னடைவு , ஃபார்ம் அவுட் என ரஸில் கடந்த சில நாட்களாகவே பாதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் ரஸில் மீதான நம்பிக்கையை கொல்கத்தா அணி விடவில்லை.

ரஸிலுக்கு காயம் ஏற்பட்ட போது, அவருக்கு கொல்கத்தா அணி துணை நின்றது. 2020 சீசன் முடிந்த பிறகு ரஸில் உடல் தகுதி பிரச்சினையை சரி செய்ய கொல்கத்தா அணி முடிவு எடுத்தது.

கேகேஆர் ஆதரவு

கேகேஆர் ஆதரவு

இதற்காக ஆண்டிரு ரஸிலை அமெரிக்கா அனுப்பி உடல் தகுதியை மேம்படுத்துவதற்கான பயிற்சியில் ஈடுபட ஸ்பான்சர் செய்தது. அந்த ஆண்டு பேட்டிங்கில் ரஸில் 117 ரன்கள் மட்டுமே அடித்தார். இருப்பினும் 2021ஆம் ஆண்டு சீசனும் ரஸிலுக்கு மோசமாகவே அமைந்தது. 10 போட்டியில் விளையாடி அவர் 183 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

தக்கவைத்த கேகேஆர்

தக்கவைத்த கேகேஆர்

வேறு எந்த அணியாக இருந்தாலும் ரஸிலை தூக்கி எறிந்திருக்கும் ஆனால் அவரை கேகேஆர் அணி மீண்டும் ஏலத்துக்கு முன்பே தக்கவைத்து கொண்டு ஆதரவு அளித்தது. ஆனால் உண்மையான காரியம் இது அல்ல. வெஸ்ட் இண்டீஸ் அணியில் சீனியர்களுக்கும், ஜூனியருக்கும் பிரச்சினை இருந்ததே நியாபகம் உள்ளதா?

ஓடியன் ஸ்மித் பேச்சு

ஓடியன் ஸ்மித் பேச்சு

அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வீரரும், பஞ்சாப் அணியில் எடுக்கப்பட்டுள்ள ஓடியன் ஸ்மித் பேட்டி ஒன்றை அளித்தார்.அதில் ரஸில் எனது ரோல் மாடல், அவரை பார்த்து தான் ஆல் ரவுண்டராக மாறினேன் என்று புகழ்ந்து பேசி தொடங்கிய அவர், இனி அவரை விட சிறப்பாக விளையாடுவேன் என்று பேட்டி அளித்தார்.

ரஸில் பதிலடி

ரஸில் பதிலடி

இது ஆண்டிரு ரஸிலிடன தன்மானத்தை சீண்டி பார்த்துவிட்டது. இதனால் பஞ்சாப் அணியில் விளையாடும் அவருக்கு தக்க பதிலடி தர வேண்டும் என்பதற்காக காயத்தையும் மீறி இன்று ரஸில் விளையாடி உள்ளார். அதுவும் ஓடியன் ஸ்மித் ஓவரில் 4 பந்தில் 22 ரன்கள் விளாசி தன் கோபத்தை தீர்த்து கொண்ட ரஸில் மொத்தமாக 8 சிக்சருடன் 31 பந்தில் 70 ரன்களை அடித்து நொறுக்கினார்.

Story first published: Friday, April 1, 2022, 23:48 [IST]
Other articles published on Apr 1, 2022
English summary
IPL 2022 – Reason for Andre Russell splendid innings today vs Punjab 26 பந்தில் அரைசதம்.. மும்பையில் மையம் கொண்ட ரஸில் சூறாவளி..கேகேஆர் அபார வெற்றி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+