Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஈ சாலா கப் நம்தே.. ஆர்சிபி கனவு திட்டம் என்னாச்சு? எங்கே தவறு நடக்கிறது? இம்முறையும் அவ்வளவு தானா?

மும்பை: ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட 3வது அணி என்றால் ஆர்சிபி அணியை கூறலாம்.

விராட் கோலி, டிவில்லியர்ஸ், கிறிஸ் கெயில், தில்சான், கேஎல் ராகுல், மேக்ஸ்வெல், யுவராஜ் சிங், பீட்டர்சன் என பல ஜாம்பவான் பட்டாளங்களே ஆர்சிபி அணிக்காக பல்வேறு காலக் கட்டத்தில் விளையாடி உள்ளனர்.

பலமான அணி அமைந்தாலும், இதுவரை ஒரு முறை கூட அந்த அணி கோப்பையை வாங்கவில்லை. ஒவ்வொரு சீசனிலும் ஈ சாலா கப் நம்தே என்ற பெங்களூரு அணியின் கனவும் நினைவாகவில்லை.

ஆர்சிபி செய்த மாற்றம்

ஆர்சிபி செய்த மாற்றம்

இம்முறை எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்று நினைத்த ஆர்சிபி நிர்வாகம், அணியில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி, கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் தான் இந்த தொடரில் விராட் கோலி களமிறங்கினார்.டுபிளஸிஸ் தொடக்க வீரராக மட்டுமல்லாமல் கேப்டனாகவும் செயல்படுகிறார்.

கார்த்திக்கால் வெற்றி

கார்த்திக்கால் வெற்றி

இதுவரை விளையாடிய 9 போட்டியில் ஆர்சிபி அணி 5ல் மட்டுமே வென்று, 4 போட்டியில் தோல்வியை தழுவியது. இந்த 5 போட்டியிலும் கூட 3 போட்டியில் தினேஷ் கார்த்திக் என்ற தனி ஆளால் தான் பெங்களூரு அணி வென்றது. இல்லையேனில் பெங்களூரு அணியும் சிஎஸ்கே, மும்பை கூட தான் இருந்திருக்கும். பெங்களூரு தற்போது தோற்ற 2 போட்டியிலும் கார்த்திக் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது தான் காரணம்.

தவறான முடிவு

தவறான முடிவு

எப்போதுமே தினேஷ் கார்த்திக் பார்த்து கொள்வார் என்றால் மற்ற வீரர்கள் எதற்கு? கேப்டன்ஷிப் அழுத்தம், மற்ற வீரர்கள் துணை நிற்காததால் டுபிளஸிஸ் ஆட்டமும் பாதிக்கப்படுகிறது. பெங்களூரு பேட்டிங்கின் முதுகு எலும்பாக பார்க்கப்படும் விராட் கோலி தொடர்ந்து சொதப்புவதும், கடந்த முறை அணியில் இருந்த படிக்கல் மற்றும் கேஎஸ் பரத்தை ஏலத்தில் எடுக்காமல் விட்டதும், அந்த அணிக்கு தற்போது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

பந்துவீச்சிலும் சொதப்பல்

பந்துவீச்சிலும் சொதப்பல்

பெங்களூரு அணியின் பந்துவீச்சில் ஹேசல்வுட்டை தவிர மற்றவர்கள் யாரும் கட்டுக்கோப்பாக பந்துவீசுவதில்லை. முகமது சிராஜின் ஃபார்ம் மற்றும் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் சாஹலை அணியில் தக்க வைக்காமல் விட்டது போன்ற எண்ணற்ற தவறான முடிவுகளை ஆர்சிபி செய்தது. டுபிளஸிஸ், கோலி, மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக்கை நம்பியே அணி கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் சொதப்பினாலும் அணி சரிந்துவிடும். தற்போது பெங்களூரு அணியில் அது தான் நடக்கிறது.

Story first published: Wednesday, April 27, 2022, 11:14 [IST]
Other articles published on Apr 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+