வெங்கடேஷ் ஐயரின் சொதப்பல் பேட்டிங்.. நடிகையுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமா? மீண்டு வருவாரா?
மும்பை: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் என்ற பாடல் வரிக்கு ஏற்ப ஐபிஎல் தொடரில் தொடங்கி ஐபிஎல் தொடரிலேயே முடிந்துவிடுமோ வெங்கடேஷ் ஐயரின் கிரிக்கெட் வாழ்க்கை என்று கிரிக்கெட் ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
ஏனெனில் அடுத்த ஹர்திக் பாண்டியாவாக வருவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இம்முறை ஏமாற்றமே காரணம் என்று ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வெங்கடேஷ் ஐயரின் திடீர் சரிவுக்கு அவர் காதல் தான் காரணம் என்ற நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்திகள் வருகின்றன.

இளம் வீராங்கனைகள் கதை
மகளிர் டென்னிஸ் உலகில் தொடர்ந்து பல்வேறு வீராங்கனைகள் கிராண்ட் ஸ்லாம் வென்று பிறகு அட்ரஸே தெரியாமல் காணாமல் போய்விட்டனர். இதற்கு காரணம், திடீரென்று கிடைக்கும் புகழில் மயங்கி ஆட்டத்திலிருந்து கவனம் தவறுவதே காரணம் என்று டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவரித்தோலாவா கூறியிருந்தார்.

வெங்கடேஷ்க்கு கிடைத்த வாய்ப்பு
இது டென்னிஸ்க்கு மட்டும் பொருந்தாது, அனைத்து துறைக்குமே பொருந்தக் கூடிய முத்தான வாக்கியம். ஐபிஎல் 14வது சீசனில் அடி பாதாளத்தில் இருந்த கொல்கத்தா அணியை தனது பேட்டிங், பந்துவீச்சு மூலம் இறுதிப் போட்டி வரை கொண்டு சென்றார் வெங்கடேஷ் ஐயர். சஞ்சு சாம்சன் போன்ற விரர்கள் பல தொடரில் அதிரடியாக விளையாடியும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைத்ததில்லை.

ஐபிஎல் சீசனில் ஏமாற்றம்
ஆனால் வெங்கடேஷ் ஐயருக்கு ஒரு 8 போட்டியை வைத்தே தேர்வுக்குழு அவரை இந்திய சீனியர் அணிக்கு தேர்வு செய்தது. அங்கு முதலில் அவர் ஜோலித்தாலும், பின்னர் ரன் குவிக்க திணறினார். ஐபிஎல் தொடரில் மாஸ் காட்டிய வெங்கடேஷ், சர்வதேச கிரிக்கெட்டில் திணறினார். தற்போது அதன் நீட்சி நடப்பு ஐபிஎல் தொடரிலும் தொடங்குகிறது.

காதல் வாழ்க்கை காரணம்?
வெங்கடேஷ் ஐயரின் இந்த சரிவுக்கு அவரது காதல் வாழ்க்கை காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பிரபல தெலுங்கு நடிகை பிரியங்கா ஜவால்கர், போட்டோவுக்கு கியூட் என்று கமெண்ட் செய்ய, அவரும் யார் நீங்களா என்று பதில் கூற, தற்போது இருவருக்கும் தனியாக டிராக் ஓடுகிறது. இதில் கவனத்தை சிதறவிட, கிரிக்கெட்டில் வெங்கடேஷ் கோட்டைவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் வெங்கடேஷ் பழைய ஃபார்ம்க்கு திரும்ப வேண்டும் என்பதே தமிழக ரசிகர்களின் எதிர்பார்ப்பு


Click it and Unblock the Notifications