Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நேற்று கங்குலி எச்சரிக்கை.. இன்று அரைசதம்.. கோலி ஃபார்ம்க்கு திரும்பிய பரபர பின்னணி

மும்பை: ஐபிஎல் தொடரில் 43வது லீக் ஆட்டத்தில் குஜராத் அணிக்கு எதிராக விராட் கோலி அரைசதம் விளாசினார்.

இது நடப்பு சீசனில் முதல் அரைசதமாகும். ஆர்சிபிக்காக விளையாடும் விராட் கோலி கடந்த 9 இன்னிங்ஸ்களில் 129 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார்.

இதனால் விராட் கோலியை விட இளம் வீரர்கள் நன்றாக விளையாடுகிறார்கள் என்பதால், இந்திய அணியில் மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

கங்குலி கருத்து

கங்குலி கருத்து

இந்த நிலையில், விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, கோலியின் தலைக்குள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார் என்பது எனக்கு புரியவில்லை. ஆனால் அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்புவார் என நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும் கோலிக்கு ஐபிஎல் முடிந்தவுடன் கோலிக்கு டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்படுவது குறித்து பிசிசிஐ ஆலோசித்தது.

பதிலடி தந்த கோலி

பதிலடி தந்த கோலி

கங்குலியின் இந்த பேச்சு, விராட் கோலியை ஆக்கோரஷப்படுத்தி இருக்கலாம். ஐபிஎல் பார்மை வைத்து டி20 உலககோப்பை அணியிலிருந்து நீக்கிவிட்டால் என்ன செய்வது என்ற எநருக்கடியின் காரணமாகவே விராட் கோலி இன்று களத்தில் தனது விமர்சகர்களுக்கு பதில் தந்தார்.

சாம்பியன் விராட்

சாம்பியன் விராட்

ஒரு சாம்பியன் என்பவன், அவரை நாலாபுறமும் போட்டு அமுக்கு கீழே தள்ளும் போது, அதனை அவர் எப்படி முறியடித்து வருகிறான் என்பதையே குறிக்கும்.அதனை தான் விராட் கோலி இன்று செய்து இருக்கிறார். முகமது ஷமி, ரஷித் கான், பெகுர்சன் உள்ளிட்ட ஓவர்களை லாவமாக விராட் கோலி விளையாடினார்.

வேற லெவல் ஷாட்

வேற லெவல் ஷாட்

விராட் கோலியின் இந்த இன்னிங்சில் 6 பவுண்டரியும், ஒரு சிக்சரும் அடங்கும். இந்த இன்னிங்சில் விராட் கோலி ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருந்திருக்கலாம். ஆனால் அவர் அடித்த ஷாட் ஒவ்வொன்றும் தரம். இது விராட் ஐபிஎல் களத்துக்கு வந்திட்டார் என்பதையே காட்டுகிறது. விராட் இந்த 53 பந்துகளில் 58 ரன்கள் என்ற ஸ்கோரை அடித்திருந்தார். அதனை 58 பந்துகளில் 72 ரன்கள் என்று மாற்றும் நேரத்தில் ஆட்டமிழந்துவிட்டார். ஆனால், இது கோலி ரசிகர்களுக்கு நல்ல செய்தி தான்

Story first published: Saturday, April 30, 2022, 18:04 [IST]
Other articles published on Apr 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+