Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெல்லி அணிக்கு பெரும் இழப்பு... முக்கிய வீரருக்கு திடீரென வந்த பிரச்சினை.. ஐபிஎல்-ல் இருந்து விலகல்?

மும்பை: டெல்லி அணியில் இருந்து மிக முக்கியமான வீரர் ஒருவர் ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து வெளியேற்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதியன்று தொடங்கி மே 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதற்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டு, இறுதிகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

டெல்லி அணிக்கு பின்னடைவு

டெல்லி அணிக்கு பின்னடைவு

மெகா ஏலத்தில் மிகவும் சிறப்பான வீரர்களை தேர்வு செய்து, பலத்துடன் இருப்பது டெல்லி அணி தான் என வல்லுநர்கள் பாராட்டினர். ஆனால் அவர்களுக்கே தற்போது சோதனை வந்துள்ளது. தென்னாப்பிரிக்க வீரர் ஆண்ட்ரிச் நார்ட்ஜேவை ரூ. 6 கோடிக்கு தக்கவைத்திருந்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. ப்ளேயிங் 11ல் சீனியர் பவுலரும் அவர் தான். டெல்லி அணிக்காக 24 போட்டிகளில் இதுவரை 34 விக்கெட்களை கைப்பற்றி கொடுத்துள்ளார்.

முக்கிய பவுலர் விலகல்

முக்கிய பவுலர் விலகல்

இந்நிலையில் அவர் பலத்த காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அதாவது அவரின் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட உள்காயத்தால் கடந்த 3 மாதங்களாக சரிவர விளையாடமல் உள்ளார். ஒரே பகுதியில் 3 பெரிய பிரச்சினைகள் உள்ளது. அந்த காயங்கள் சரியாக 2 மாதங்களுக்கு மேல் ஆகும் எனத்தெரிகிறது. மேலும், ஐபிஎல் தொடரிலும் விளையாடக்கூடாது என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

மாற்று வீரர்கள் யார்

மாற்று வீரர்கள் யார்

ப்ளேயிங் 11-க்காக தக்கவைக்கப்பட்டிருந்த ஒரு வீரர் விலகவுள்ளது, அந்த அணிக்கு தொடக்கத்திலேயே பின்னடைவை கொடுத்துள்ளது. எனினும் நார்ட்ஜேவின் இடத்தை நிரப்ப வேறு சில தேர்வுகளையும் டெல்லி அணி வைத்துள்ளது. மிட்செல் மார்ஷ், ஷர்துல் தாக்கூர், முஸ்திவிசூர் ரஹ்மான், கம்லேஷ் நாகர்கோட்டி, கலீல் அகமது, சேட்டன் சக்காரியா, லுங்கி ங்கிடி ஆகியோர் உள்ளனர்.

Recommended Video

BCCI to earn 800 Crore from IPL Sponsors | Aanee Cricket | OneIndia Tamil
லுங்கி இங்கிடியும் இல்லை

லுங்கி இங்கிடியும் இல்லை

இதில் தென்னாப்பிரிக்க வீரர் லுங்கி இங்கிடியும் ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் விளையாடமாட்டார். இதனால் முஸ்திவிசூர் ரஹ்மானை வைத்து தான் நார்ட்ஜேவின் இடத்தை பூர்த்தி செய்ய வேண்டும். முஸ்திவிசூர் இதுவரை 38 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 38 விக்கெட்கள் எடுத்துள்ளார். அவரின் எகானமி வெறும் 7.84 மட்டுமே ஆகும்.

Story first published: Thursday, March 10, 2022, 13:21 [IST]
Other articles published on Mar 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+