ஐபிஎல் ப்ளே ஆஃப் எங்கு தெரியுமா?.. 2 அணிகளுக்கு ஜாக்பாட் வாய்ப்பு.. பிசிசிஐ எடுத்த ஸ்பெஷல் முடிவு!
மும்பை: ஐபிஎல் போட்டிகள் குறித்து பிசிசிஐ எடுத்துள்ள முடிவால் இரண்டு அணிகளுக்கு மட்டும் பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
15வது ஐபிஎல் சீசன் தொடர் கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதுவரை 11 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ள சூழலில் பல்வேறு திருப்புமுனைகள், ஆச்சரியங்கள் என களைக்கட்டியுள்ளது.

அட்டவணையில் குழப்பம்
இந்த முறை கொரோனா அச்சுறுத்தலால், அனைத்து லீக் போட்டிகளையும் மும்பை, புனே ஆகிய 2 நகரங்களில் இருக்கும் 4 மைதானத்தில் மட்டும் நடத்தி வருகிறது. எனினும் ப்ளே ஆஃப் சுற்றுகள் மற்றும் இறுதிப்போட்டி எங்கு நடைபெறும் என பிசிசிஐ அறிவிக்கவில்லை. அட்டவணையும் வெளியிடப்படவில்லை.

மைதானங்கள் உறுதியா?
இந்நிலையில் அதற்காக நடத்தப்பட்டு வந்த ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது குவாலிஃபையர் மற்றும் முதல் எலிமினேட்டர் போட்டியை லக்னோவில் உள்ள எக்னா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடத்தவும், 2வது எலிமினேட்டர் மற்றும் இறுதிப்போட்டியை அகமதாபாத் மோதிரா மைதானத்திலும் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2 அணிகளுக்கு அதிர்ஷ்டம்
இது ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள லக்னோ மற்றும் குஜராத் அணிகளுக்கு ஜாக்பாட்டாக அமைந்துள்ளது. குஜராத் அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலுமே வெற்றி பெற்றுள்ளது. லக்னோ அணி 2 போட்டிகளில் ஆடி ஒன்றில் வெற்றி கண்டுள்ளது. சிறப்பாக விளையாடி டாப் 4 இடங்களுக்கு சென்றால் அவர்களுக்கு இது பெரிய அட்வாண்டேஜாகும்.

பலன் என்ன?
ஐபிஎல் தொடரில் ஹோம் அட்வாண்டேஜ் பெரும் அணிகள் பெரும்பாலும் வெற்றிகளையே பெறும். அந்த வகையில் இந்த 2 அணிகளும் ப்ளே ஆஃப்-ல் ஹோம் அட்வாண்டேஜ் பெற்றால், கூடுதல் பலமாக இருக்கும். இதனால் இனி சற்று கவனத்துடன் அவர்கள் விளையாடுவதை ரசிகர்களால் பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications