ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை.. பல கோடிகளை ஈட்டவுள்ள பிசிசிஐ.. வாயைப்பிளந்த ரசிகர்கள்!!
மும்பை: ஐபிஎல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவில் ஸ்பான்சர்ஷிப் வருமானத்தை பிசிசிஐ இந்தாண்டு ஈட்டவுள்ளது.
15வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி முதல் மும்பை வான்கடேவில் தொடங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த முறை புதிதாக 2 அணிகளை சேர்த்து பிசிசிஐ ஏற்கனவே பல்லாயிரம் கோடிகளில் வருமானம் ஈட்டியிருந்தது.

ஐபிஎல் வருமானம்
இந்நிலையில் ஸ்பான்சர்ஷிப்பிலும் பெரும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு வரை ஐபிஎல் தொடருக்கான மெயின் ஸ்பான்சராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த விவோ நிறுவனம் திடீரென விலகியது. இதனையடுத்து டாடா நிறுவனம் புதிய ஸ்பான்சராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எனினும் புத்திசாலித்தனமாக குறைந்த தொகைக்கு தான் டாடா வாங்கியுள்ளது.

தொகை எவ்வளவு
விவோ நிறுவனம் ஒரு சீசனுக்கு ரூ.440 கோடி வழங்கி வந்தது. அதுவும், 2 புதிய அணிகள் வருவதால் 2022ம் ஆண்டு ரூ.484 கோடி மற்றும் 2023ம் ஆண்டு ரூ.512 கோடியும் வழங்கவிருந்தது. அதன்படி விவோ 2 சீசன்களுக்கு சேர்த்து ரூ. 996 கோடி தரவேண்டும். ஆனால் டாடா நிறுவனமோ ஒரு சீசனுக்கு ரூ.335 கோடி மட்டுமே வழங்கவுள்ளது. 2 சீசன்களுக்கு சேர்த்து ரூ.670 கோடி தரவுள்ளது. இதில் இழப்பு ஏற்பட்டாலும், துணை ஸ்பான்சர்களை பிசிசிஐ அதிகப்படுத்திவிட்டது.

ஸ்பான்ஸர்கள்
இதுவரை 6 துணை ஸ்பான்சர்களை வைத்திருந்தது. தற்போது ரூபே மற்றும் ஸ்விக்கி நிறுவனங்களும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி ட்ரீம் 11 (ரூ. 48 கோடி), அன் அகாடமி ( ரூ. 46 கோடி), க்ரெட் ( ரூ. 44 கோடி ), அப்ஸ்டாக்ஸ் ( ரூ.42 கோடி), ரூபே ( ரூ.42 கோடி), ஸ்விக்கி ( ரூ. 44 கோடி ), பேய்டிம் ( ரூ.28 கோடி ), சியட் ( ரூ. 28 கோடி)
Recommended Video

வரலாற்றில் மாற்றம்
இதன் மூலம் சுமார் ரூ. 800 கோடி வரை வரும் ஐபிஎல் தொடர் மூலம் பிசிசிஐ வருமானம் ஈட்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரையிலான ஐபிஎல் வரலாற்றிலேயே ஸ்பான்சர்ஷிப்பில் கிடைக்கப்போகும் அதிகபட்ச தொகையாக இது இருக்கும். அடுத்தாண்டு இதனை விட அதிகமாக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications