Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவுக்கு புதிய கேப்டன்? நிர்வாகத்திற்கு வந்த புதிய யோசனை.. 2 வீரர்கள் மீது திரும்பிய பார்வை!!

மும்பை: சென்னை அணிக்கு மீண்டும் புதிய கேப்டனை நியமிக்க நிர்வாகம் யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்கத்திலேயே தோல்விகளை சந்தித்து வருகிறது.

ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி தொடரின் முதல் 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது இதுவே முதல்முறையாகும்.

சிஎஸ்கே பரிதாபம்

சிஎஸ்கே பரிதாபம்

சென்னை அணியை நடப்பு சீசனில் ரவீந்திர ஜடேஜா தான் வழிநடத்தி வருகிறார். களத்தில் தோனி சில நேரங்களில் முடிவெடுப்பதாகவும், ஜடேஜாவின் கேப்டன்சியில் தலையிடுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. ஆனால் ஜடேஜா சில சமயங்களில் திணறுவதால் தான் தோனி உதவிக்கு வருகிறார் என விளக்கங்களும் வருகின்றன.

 ஜடேஜாவுக்கு நெருக்கடி

ஜடேஜாவுக்கு நெருக்கடி

ஜடேஜாவுக்கு 4 பிரச்சினைகள் உள்ளன. இவர் இதற்கு முன்பு கேப்டனாக இருந்தது கிடையாது. திடீரென உயர் பதவி கிடைத்ததால் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன. இதே போல அவர் ஆல்ரவுண்டர் என்பதால், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங், கேப்டன்சி என அனைத்து துறைகளையும் ஒரே நபராக கையாள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கேப்டன்சி மாற்றம்

கேப்டன்சி மாற்றம்

இதனால் ஜடேஜாவை கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்க சிஎஸ்கே நிர்வாகம் யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மாற்றாக மொயீன் அலி அல்லது டுவைன் பிராவோ என யாரேனும் ஒருவரை கேப்டனாக நியமிக்கவுள்ளதாக தெரிகிறது.

நடவடிக்கை எப்போது

நடவடிக்கை எப்போது

எனினும் இந்த நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படாது. இதுவரை 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இனி வரும் போட்டிகளில் தொடர்ந்து தோல்விகள் வந்தால், நிச்சயம் இந்த முடிவு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, April 4, 2022, 20:32 [IST]
Other articles published on Apr 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+