Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனிக்கு இனி புது பேட்டிங் இடம்.. கடைசி ஐபிஎல் என்பதால் திட்டம்?? ரசிகர்களுக்கு காத்துள்ள சர்ப்ரைஸ்

மும்பை: ஐபிஎல் தொடரில் இந்தாண்டு தோனி புதிய பேட்டிங் ஆர்டரில் களமிறங்கி விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

IPL 2022-ல் Batting Order-ஐ மாற்ற போகும் Dhoni? இதான் காரணம்

15வது சீசனுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் சனிக்கிழமை ( மார்ச் 26 )முதல் தொடங்கவுள்ளது. மே 29 வரை இப்போட்டிகள் நடைபெறுகின்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

கடைசி ஐபிஎல் தொடர்?

கடைசி ஐபிஎல் தொடர்?

சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு இதுவே கூட கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம். இதனால் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிகளை குவித்து, கோப்பையுடன் வழி அனுப்புவார்கள் என தெரிகிறது. இதே போல தோனியும், தனது பழைய ஆக்ரோஷ ஆட்டத்தை கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதன் முதல்படியாக தான் தற்போது ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனர்ஜி குறையாத தோனி

எனர்ஜி குறையாத தோனி

கடந்த 2 சீசன்களாக தோனி 30 போட்டிகளில் வெறும் 314 ரன்களை தான் அடித்துள்ளார். 2020ல் 200 ரன்களும், கடந்த சீசனில் 114 ரன்களும் மட்டுமே என தனது கரியரில் மோசமான பேட்டிங்கை வெளிக்காட்டியுள்ளார். ஆனால் அவரின் அதிரடி இன்னும் குறையவில்லை. இதற்கு உதாரணம், கடந்த சீசனின் குவாலிஃபையர் சுற்றில் டெல்லிக்கு எதிராக 6 பந்துகளில் 18 ரன்களை விளாசினார். கடைசி ஓவரில் 3 பவுண்டரிகளை அடித்து அசத்தினார்.

பேட்டிங் வரிசை மாற்றம்

பேட்டிங் வரிசை மாற்றம்

இதன் மூலம் தோனியிடம் இன்னும் ஃபினிஷர் தகுதி உள்ளது, ஆனால் அவருக்கு தேவையான நேரம் கிடைக்கவில்லை எனத்தெரிகிறது. வழக்கமாக 7வது வீரராக விளையாடும் தோனிக்கு கடைசி 2 ஓவர்கள் தான் கிடைக்கிறது. எனவே இனி டாப் ஆர்டரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை பயிற்சியாளர்களே பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிகிறது.

 சர்ப்ரைஸ்

சர்ப்ரைஸ்

அதாவது ஆட்டத்தின் 11 அல்லது 12வது ஓவர்களில் களமிறங்கும்படி தோனியின் பேட்டிங் ஆர்டரை உயர்த்தவுள்ளனர். இந்தாண்டு தோனி தனது அதிரடிகளை ரசிகர்களுக்கு காட்டிவிட்டு, ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை சர்ஃபரைஸாக முதல் போட்டியிலேயே காணலாம்.

Story first published: Tuesday, March 22, 2022, 10:33 [IST]
Other articles published on Mar 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+