For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“நான் விலகிக் கொள்கிறேன்”.. முக்கிய வீரர் எடுத்த துணிச்சல் முடிவு.. சிஎஸ்கே அணியில் மாற்றமா??

மும்பை: சென்னை அணியின் முக்கிய வீரர் ஒருவர் ப்ளேயிங் 11ல் இருந்து விலக தயார் எனத் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து தடுமாறி வருகிறது.

விளையாடிய முதல் 4 போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே பெற்றுள்ளது. இதனால் புதிய கேப்டன் ஜடேஜா மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

தவறுகள் என்ன

தவறுகள் என்ன

சென்னை அணியின் தோல்விக்கு முதன்மை காரணமாக பார்க்கப்படுவது பவுலிங் தான். தீபக் சஹார் இல்லாததால் முகேஷ் சௌத்ரியை வைத்து சமாளித்து வருகின்றனர். இவரும் கடந்த ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஃபார்முக்கு வந்துவிட்டார். ஆனால் பேட்டிங்கில் சம்பந்தமே இன்றி ருதுராஜ் கெயிக்வாட் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

குவியும் விமர்சனங்கள்

குவியும் விமர்சனங்கள்

முதல் போட்டிகளில் 2 ரன்களை மட்டுமே அடித்த ருதுராஜ், 4வது போட்டியில் பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிலும் 16 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். இதனால் இவரை அணியில் இருந்து நீக்கிவிட்டு, வாய்ப்புக்காக காத்துள்ள டெவோன் கான்வே, சேனாதிபதியை களமிறக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

 அவசர ஆலோசனை

அவசர ஆலோசனை

இந்நிலையில் இதற்காக ருதுராஜுடன் தோனி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். அதில், வரவிருக்கும் ஆர்சிபிக்கு எதிரான போட்டி தான் உனக்கு கடைசி வாய்ப்பு என்றும், அதில் சிறப்பாக ஆடா விட்டால் இனி ப்ளேயிங் 11ல் வாய்ப்பை நினைத்து பார்க்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்ததாக தெரிகிறது.

கெயிக்வாட்டின் துணிச்சல்

கெயிக்வாட்டின் துணிச்சல்

இதற்கு ருதுராஜ் கெயிக்வாட்டும் சம்மதம் தெரிவித்துள்ளாராம். அதாவது, அடுத்த போட்டியில் நான் சிறப்பாக ஆடவில்லை என்றால் நீக்கிவிடுங்கள் என பகிரங்கமாக கூறியுள்ளார். மேலும் மிகவும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. ருதுராஜுக்கு உத்வேகம் கொடுத்துள்ளதால், நல்ல கம்பேக் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணி அடுத்ததாக வரும் நாளை இரவு ஆர்சிபியுடன் மோதுகிறது.

Story first published: Monday, April 11, 2022, 15:31 [IST]
Other articles published on Apr 11, 2022
English summary
CSK vs RCB ( சிஎஸ்கே vs ஆர்சிபி ) ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடாவிட்டால் அணியில் இருந்து விலக தயார் என ருதுராஜ் கெயிக்வாட் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+