Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி.நடராஜன் தந்த நெருக்கடி.. முக்கிய ஆயுதத்தை கையில் எடுத்த தோனி.. சிஎஸ்கே வெளியிட்ட சூசக தகவல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டன் தோனி, ரசிகர்கள் எதிர்பார்க்காத முக்கிய ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார்.

கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி, இந்தாண்டு மிகவும் மோசமாக சொதப்பி வருகிறது.

அந்த அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. இது வரலாற்றில் முதல்முறையாகும்.

சிஎஸ்கே நிலைமை

சிஎஸ்கே நிலைமை

இதனையடுத்து சிஎஸ்கேவின் தோல்வி பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தோனியே நேரடியாக களமிறங்கியுள்ளார். வீரர்களுக்கு தனியாக ஆலோசனைக்கூட்டம் நடத்தி அதில், இளம் வீரர்களுக்கு அணியின் திட்டம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கியிருந்தார். இதே போல ருதுராஜ் கெயிக்வாட்டிற்கும் ஸ்பெஷல் வகுப்பு நடத்தியிருந்தார்.

 தோனியின் ஃபார்முலா

தோனியின் ஃபார்முலா

இந்நிலையில் தோனியே தனது பேட்டிங்கிற்காக நீண்ட வருட ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார். அதாவது கேப்டன் பதவியில் இருந்து விலகிய அவர், 3 போட்டிகளில் இதுவரை 87 ரன்களை அடித்துள்ளார். இதில் ஒரு அரைசதம் மற்றும் 2 நாட் அவுட்டாகும். இப்படி இருக்கையில் தற்போது ஹெலிகாப்டன் ஷாட்டிற்கு என தனி பயிற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஒரு வீடியோவாக சிஎஸ்கேவும் வெளியிட்டுள்ளது.

 என்ன காரணம்

என்ன காரணம்

சென்னை அணி அடுத்ததாக நாளை ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இதில் தான் தமிழக சிங்கம் டி.நடராஜன் இடம்பெற்றிருக்கிறார். இவர் பெரும்பாலும் யார்க்கர்களை வீசி திணறடிப்பார். இதனால் அந்த யார்க்கரை ஹெலிக்காப்டர் ஷாட் மூலம் சிக்ஸர்களாக மாற்ற தோனி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். DY பாட்டில் மைதானம் பேட்டிங்கிற்கு ஓரளவிற்கு உதவும் என்பதால் தோனியின் ஹெலிகாப்டன் சிக்ஸர்களை பார்க்கலாம்.

நட்டுவின் தாண்டவம்

நட்டுவின் தாண்டவம்

ஆனால் அதுவும் சாதாரண விஷயம் அல்ல. காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த நடராஜன் தற்போது சரியான லெந்தில் துள்ளியமாக யார்க்கர் போடுகிறார். இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் 4 முக்கிய விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். அதுவும் எகானமி 6.50 மட்டுமே உள்ளதால் தோனி சமாளிப்பது கடினம் தான்.

Story first published: Friday, April 8, 2022, 20:54 [IST]
Other articles published on Apr 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+