Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஐபிஎல் பாதியிலேயே நின்றுவிடும்” .. முக்கிய விஷயத்தில் பிசிசிஐ கஞ்சத்தனம்.. வல்லுநர்கள் எச்சரிக்கை!!

மும்பை: ஐபிஎல் தொடருக்குள் கொரோனா நுழையும்படி மீண்டும் ஒரு ரிஸ்க்-ஐ எடுத்துள்ளது பிசிசிஐ.

ஐபிஎல் தொடர் குறித்த அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. வரும் மார்ச் 26ம் தேதி போட்டிகள் தொடங்குகிறது.

இதற்கான பயோ பபுள் விதிமுறைகள் மற்றும் பரிசோதனைகள் குறித்து பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

புதிய விதிமுறைகள்

புதிய விதிமுறைகள்

அதன்படி அனைத்து அணிகளின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் வரும் மார்ச் 8ம் தேதிக்குள் மும்பைக்கு வந்துவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பயோபபுளில் இந்திய வீரர்கள் 3 நாட்களும், அயல்நாட்டு வீரர்கள் 5 நாட்களும் குவாரண்டை இருக்கவுள்ளனர்.

பிசிசிஐ செய்யும் தவறு

பிசிசிஐ செய்யும் தவறு

இவ்வளவு பாதுகாப்புகள் இருக்கும் போதிலும் பிசிசிஐ ஒரு விஷயத்தில் தவறு செய்யவுள்ளது. அதாவது அனைத்து வீரர்களும் தங்களது சொந்த செலவில் சாதாரண பயணிகள் விமானத்தில் வந்துக்கொள்ள வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்காக தனி விமானங்கள் அனுப்பப்படமாட்டாது.

என்ன பிரச்சினை உள்ளது

என்ன பிரச்சினை உள்ளது

பல்வேறு ஊர்களில் இருந்து வரும் வீரர்கள், பயணிகள் விமானத்தில் வந்தால் கொரோனாவால் பாதிப்படைகின்றன. கடந்தாண்டுக்கூட இது போன்று சில சம்பவங்கள் நடந்தன. அனைத்து இடங்களுக்கும் தனி விமானம் அனுப்பப்பட்டு வீரர்கள் அழைத்து வரப்பட்டனர். ஆனால் இந்தாண்டு அது மறுக்கப்பட்டுள்ளது.

கடும் எச்சரிக்கை

கடும் எச்சரிக்கை

இந்தியாவிலேயே போட்டிகளை நடத்த விரும்பும் பிசிசிஐ, அதற்கான ஏற்பாடுகளையும் சரியாக செய்ய வேண்டும். ஆனால் பணம் செலவாகிறது என நினைத்து பிசிசிஐ ரிஸ்க் எடுத்துள்ளது. இதனால் ஐபிஎல் தொடர் மீண்டும் பாதியிலேயே நின்றுவிடும் அபாயம் உள்ளதாக முன்னாள் வீரர்களும் வல்லுநர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Story first published: Wednesday, March 2, 2022, 19:08 [IST]
Other articles published on Mar 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+