“வேண்டுமென்றே செய்தாரோ..” ரோகித் - பொல்லார்ட் இடையே புகைச்சல்.. சிஎஸ்கேவிடம் தோற்றதன் விளைவு!
மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா மீது சீனியர் வீரர் பொல்லார்ட் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் மும்பை அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோற்கடித்தது.
இந்த போட்டியில் தோனியின் ஃபினிஷிங் தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

மும்பையின் கனவு
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 155 ரன்களை குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணியில் முன்னணி வீரர்கள் ஏமாற்றினர். உத்தப்பா 30 ரன்களும், அம்பத்தி ராயுடு 40 ரன்களும் அடிக்க கடைசி 6 பந்துகளில் சென்னை அணிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. மும்பையின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியிருந்தது.

கடைசி ஓவர் பேட்டிங்
அப்போது தான் ஸ்ட்ரைக்கிற்கு வந்தார் முன்னாள் கேப்டன் தோனி. ஜெய்தேவ் உனத்கட் வீசிய 20 ஓவரின் கடைசி 4 பந்துகளில் 6, 4, 2, 4 என அடுத்தடுத்து தோனி ரன் விளாசினார். இதனால் சென்னை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக 7வது தோல்வியை பெற்று மும்பை அணி சோகத்தில் ஆழ்ந்தது.

கடும் அதிருப்தி
இந்நிலையில் இந்த தோல்விக்கு பிறகு ரோகித் சர்மா மீது பொல்லார்ட் கடும் கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. அதாவது, களத்தில் தோனி இருக்கும் போது கடைசி ஓவரை தேவ்தத்திடம் கொடுத்தது தவறான முடிவு. தோனியை சமாளிக்கக்கூடிய அனுபவம், கெயீரன் பொல்லார்டிடம் உள்ளது. அவரை பந்துவீச அழைத்து வந்திருக்க வேண்டும். நேற்றைய போட்டியில் ஒரு ஓவர் கூட வீசாத பொல்லார்ட் ஸ்லோயர் பந்துகளை நன்கு வீசக்கூடியவர். அவரை திடீரென கடைசி ஓவரில் கொண்டு வந்திருந்தால் தோனி கேட்ச் ஆகியிருக்கலாம்.

கடைசி வரை நம்பிக்கை
தனக்கு கடைசி ஓவரை ரோகித் தருவார் என பொல்லார்ட் எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் இளம் வீரர் உனத்கட்டிடம் கொடுத்துவிட்டார். ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு உனத்கட்டின் கடைசி ஓவரை தோனி காட்டடி அடித்துள்ளார். இதனை அறிந்தும் ரோகித் இப்படி தன் மீது நம்பிக்கை இல்லாமல் நடந்துக் கொண்டது குறித்து பொல்லார்ட் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications