Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆர்சிபி கேப்டன் யார்?.. கடைசி நேர ட்விஸ்ட்.. விராட் கோலியிடம் கெஞ்சி வரும் நிர்வாகம்.. என்ன ஆனது

பெங்களூரு: ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் வேளையில் விராட் கோலியிடம் ஆர்சிபி நிர்வாகம் கெஞ்சி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

IPL 2022: Virat Kohli Shares Important News About RCB Skipper | Oneindia Tamil

15வது சீசன் ஐபிஎல் தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. வரும் மார்ச் 26ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதற்காக அனைத்து அணிகளும் தங்களது கேப்டன்களை அறிவித்துவிட்ட நிலையில் ஆர்சிபி மட்டும் தாமதப்படுத்தி வருகிறது.

கேப்டன் பதவி

கேப்டன் பதவி

கடந்த 2013ம் ஆண்டு ஆர்சிபி அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டவர் விராட் கோலி. அன்றில் இருந்து தொடர்ச்சியாக 9 சீசன்களாக அந்த அணியை வழி நடத்தி வரும் கோலி, இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றுக்கொடுக்கவில்லை. ஐசிசி கோப்பையும் வெல்லவில்லை, ஐபிஎல் கோப்பையும் வெல்லவில்லை எனக்கூறி விமர்சனங்கள் வலுத்ததால் கேப்டன் பதவிகளில் இருந்து விலகினார்.

3 தேர்வுகள்

3 தேர்வுகள்

விராட் கோலிக்கு அடுத்தபடியாக ஆர்சிபி அணியை வழிநடத்த 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் க்ளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்பதால் தினேஷ் கார்த்திக் அல்லது டூப்ளசிஸ் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவரை கேப்டனாக நியமிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரும் 12ம் தேதி வெளியாகிறது.

அதிர்ச்சி தந்த ஆர்சிபி

அதிர்ச்சி தந்த ஆர்சிபி

இந்நிலையில், தான் அதிர்ச்சி செய்தி ஒன்று கிடைத்துள்ளது. அதாவது கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி கொடுத்த கடிதத்தையே இன்னும் நிர்வாகம் ஏற்காமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், கோலி தான் கேப்டனாக தொடர வேண்டும் என்பதில் நிர்வாகம் உறுதியுடன் இருப்பது தெரிகிறது. கோலியிடம் இதுகுறித்து தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆதாரங்கள்

ஆதாரங்கள்

வரும் 12ம் தேதி கேப்டனை அறிவிப்பதற்காக உருவ கட் அவுட் போன்ற சில புகைப்படங்களை சமீபத்தில் ஆர்சிபி வெளியிட்டிருந்தது. ஆனால் அவை அனைத்துமே விராட் கோலியுடைய உருவங்கள் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கோலியும் கேப்டனாக தொடர ஒப்புக்கொண்டுள்ளாரா என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.

Story first published: Thursday, March 10, 2022, 17:49 [IST]
Other articles published on Mar 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+