Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்: யாரும் எதிர்பாராத முடிவு.. 3 அணிகளின் தக்கவைப்பு பட்டியல் வெளியானது.. யாருக்கெல்லாம் இடம்?

சென்னை: ஐபிஎல் அணிகளுக்கு வழங்கப்பட்ட ரிட்டன்ஷன் காலக்கெடு முடிவடைந்த நிலையில் 3 அணிகள் தக்கவைக்கப்போகும் பட்டியல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Dhoni, Kohli, Rohit, Pant retained for IPL 2022 | OneIndia Tamil

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இதனால் ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும் என பிசிசிஐ அறிவித்தது.

தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை ஒப்படைக்க இன்றே கடைசி நாளாகும். இன்று இரவு 9.30 மணிக்கு அவை அறிவிக்கப்படவிருக்கின்றன.

சிஎஸ்கே அணி

சிஎஸ்கே அணி

இந்நிலையில் 3 அணிகள் தக்கவைக்கப்போகும் விவரங்கள் வெளியாகியுள்ளன. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே தனது முதல் தேர்வாக எம்.எஸ்.தோனியை தக்கவைத்துவிட்டது. அவருக்கு அடுத்தபடியாக ரவீந்திர ஜடேஜா அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார். இதே போல கடந்த சீசனில் கலக்கிய ருதுராஜ் கெயிக்வாட் 3வது வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அயல்நாட்டு தேர்வை பொறுத்தவரையில் டூப்ளசிஸ் மற்றும் மொயீன் ஆகியோர் இடையே கடும் போட்டி நடைபெற்று வந்த நிலையில் மொயீன் அலி வென்றுள்ளார்.

டெல்லி கேப்பிடல்ஸ்

டெல்லி கேப்பிடல்ஸ்

கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் இறுதிகட்ட முடிவுகளை எடுத்துவிட்டது. அந்த அணியின் கேப்டனான ரிஷப் பண்ட்- ஐ முதன்மை தேர்வாக தக்கவைத்துள்ளது. அவருக்கு அடுத்தபடியாக பிரித்வி ஷா மற்றும் அக்‌ஷர் பட்டேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அயல்நாட்டு வீரர் தேர்வில் ஆன்ரே நார்ட்ஜே தக்கவைக்கப்படுகிறார். இந்த பட்டியலில் ரபாடா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஒதுக்கப்பட்டது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 கேகேஆர்

கேகேஆர்

கடந்த சீசனில் இறுதிப்போட்டி வரை சென்று அசத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெரும் முடிவுகளை எடுத்துள்ளது. அதாவது அந்த அணியின் கேப்டன் இயான் மோர்கன் மற்றும் சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மாறாக இளம் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். அயல்நாட்டு வீரர்கள் வரிசையில் சுனில் நரேன் மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் தக்கவைக்கப்படுகின்றனர்.

 தொடர் குழப்பம்

தொடர் குழப்பம்

மற்ற அணிகளில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதால் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் இன்று மாலை 5 மணிக்குள் பிசிசிஐ-யிடம் அனைத்து அணிகளும் பட்டியலை சமர்ப்பித்திருக்கும். இன்று இரவு 9.30 மணிக்கு அனைத்து அணிகளிலும் தக்கவைக்கப்போகும் வீரர்களின் விவரம் தெரியவந்துவிடும்.

Story first published: Tuesday, November 30, 2021, 17:19 [IST]
Other articles published on Nov 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+