Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் மெகா ஏலம்.. இன்று வெளியாகிறது வீரர்கள் தக்கவைப்பு விவரங்கள்.. எங்கு எப்படி.. காணலாம்!

சென்னை: 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் வீரர்கள் தக்கவைப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Recommended Video

IPL 2022 Mega Auction:Retention List, Timings, Rules, Fees | OneIndia Tamil

அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெறவிருக்கிறது. லக்னோ, அகமதாபாத் என 2 புதிய அணிகள் வந்திருப்பதால் விதிமுறைகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

விதிமுறை

விதிமுறை

ஏற்கனவே உள்ள 8 அணிகளும் அதிகபட்சமாக 3 இந்திய வீரர்கள் மற்றும் குறைந்தபட்சமாக ஒரு அயல்நாட்டு வீரரை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். அதாவது 2 இந்திய வீரர்கள் + 2 அயல்நாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்கள் + 1 அயல்நாட்டு வீரர் என தக்கவைத்துக் கொள்ளலாம். அவர்களின் ஊதியங்களும் பிசிசிஐ-யே நிர்ணயித்துள்ளது. அதாவது முதன்மை வீரருக்கு ரூ.16 கோடி, 2வது வீரருக்கு ரூ.12 கோடி, 3வது வீரருக்கு ரூ.8 கோடியும், 4வது வீரருக்கு ரூ.6 கோடியும் ஊதியமாக வழங்க வேண்டும்.

இன்று அறிவிப்பு

இன்று அறிவிப்பு

அந்தவகையில் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களை தேர்வு செய்வதில் பல கட்ட ஆலோசனைகளை முடித்துள்ளது. சிஎஸ்கே, மும்பை உள்ளிட்ட அணிகள் தேர்வு செய்துவிட்ட நிலையில் பஞ்சாப் அணி ஒரு வீரரை கூட தக்கவைக்க விரும்பவில்லை என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் அவை அனைத்தும் குறித்த இறுதிகட்ட அறிவுப்புகள் இன்று வெளியாகிவிடும்.

எப்படி தெரிந்துக்கொள்ளலாம்

எப்படி தெரிந்துக்கொள்ளலாம்

ஒவ்வொரு அணியும் எந்த வீரர்களை தக்கவைத்துள்ளது என்ற அறிவிப்பை இன்று பிசிசிஐ வெளியிடுகிறது. இன்று இரவு 9.30 மணிக்கு நேரலையில் ஒவ்வொரு வீரரின் பெயரும் அறிவிக்கப்பட்டு அவரின் ஊதியங்களும் நிர்ணயிக்கப்படவுள்ளது. இந்த நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதே போல டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் செயலியிலும் நேரலை செய்யப்படுகிறது.

புதிய அணிகளுக்கான சலுகை

புதிய அணிகளுக்கான சலுகை

இந்த மெகா ஏலத்தில் வீரர்கள் குறித்த அறிவிப்பு வெளியான நிமிடத்தில் இருந்து புதிதாக வந்துள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகளின் சிறப்பு சலுகைகள் தொடங்கிவிடும். பழைய அணிகள் கழட்டிவிடும் வீரர்களில் இருந்து ஏதேனும் 2 வீரர்களை ஏலத்திற்கு முன்பே நேரடியாக ஒப்பந்தம் செய்துக்கொள்ளலாம். இதற்காக வீரர்களும் - புதிய அணிகளும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, November 30, 2021, 13:13 [IST]
Other articles published on Nov 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+