Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காவ்யாவை பழிவாங்கிய ரஷித் கான்.. ரஷித் கான் மிரட்டல் பேட்டிங்கின் பின்னணி.. செம நோஸ் கட்

மும்பை: ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரஷித் கானின் அபார ஆட்டம் மூலம் குஜராத் அணி வென்றது.

ரஷித் கான் சுழற்பந்துவீச்சாளராக இருந்தாலும், ஒரு அளவுக்கு பேட்டிங் வரும். ஆனால் கடைசி ஓவரில் 23 ரன்கள் அடிக்கும் அளவுக்கு பேட்டிங் வருமா என்று ரசிகர்களும் ஆச்சரியம் அடைந்தனர்.

அதுவும் யான்சென் மாதிரி ஒரு பந்துவீச்சாளரை எதிர்கொண்டு, அந்த நெருக்கடியில் ரன் அடிப்பது என்பது வேற லெவல்.

ரஷித் ரிவெஞ்ச்

ரஷித் ரிவெஞ்ச்

ஆனால் ரஷித் கான் நேற்று செய்தது பக்கா ரிவெஞ்ச் ஸ்டோரி என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், நேற்று பழிவாங்க வேண்டும் என்று ஒற்றை குறிகோளில் தான் ரஷித் கான் இந்த ஆட்டத்தை விளையாடினார். காரணத்தை தெரிந்து கொள்ள நாம் சில மாதங்கள் முன்நோக்கி செல்ல வேண்டும்.

மரியாதை இல்லை

மரியாதை இல்லை

ஐபிஎல் தொடரில் ரஷித் கான் ஐதராபாத் அணியில் தான் சேர்க்கப்பட்டார். பிறகு, ஐதராபாத் அணியின் தவிர்க்க முடியாத வீரராக விளங்கினார். ரஷித் கானும், இது என்னுடைய அணி என்ற பாணியில் தான் பல போட்டிகளை தனது பந்துவீச்சு மூலம் வெற்றியை பெற்று கொடுத்தார். ஆனால், ரஷித் கானுக்கு போக போக மரியாதை கிடைக்கவில்லை.

டாம் மூடி அரசியல்

டாம் மூடி அரசியல்

ஐதராபாத் அணியின் இயக்குனர் டாம் மூடி அரசியல் பண்ண தொடங்கிவிட்டார். கடந்த சீசன் போதே வார்னர், ரஷித் கான் இருவரும் டாம் மூடியின் செயலால் அதிருப்தியில் இருந்தனர். மேலும் ரஷித் கான் கேட்ட சம்பளத்தை தர முடியாது என்றும், தாராளமாக வேறு அணிக்கு விளையாடுங்கள் என்றும் டாம் மூடி சொல்லிவிட்டார்.

கெத்து காட்டிய ரஷித்

கெத்து காட்டிய ரஷித்

இதனால் விரக்தி அடைந்த ரஷித் கான், குஜராத் அணிக்கு சென்றுவிட்டார். தற்போது ஐதராபாத் அணி நிர்வாகத்தை பழிவாங்கவே, ரஷித் கான் இப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐதராபாத் அணியின் பலமான வேகப்பந்துவீச்சுக்கு மத்தியில் ரஷித் கானும் இருந்திருந்தால் எப்படி இருக்கும். ஆனால் அந்த தவறை நீங்கள் செய்து வீட்டீர்கள் என்பதை உணர்த்தவே ரஷித் கான் இதனை செய்துள்ளார்.

Story first published: Thursday, April 28, 2022, 11:53 [IST]
Other articles published on Apr 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+