பண்ட் கேப்டன்சியில் பெரும் பிரச்சினை?? ரிக்கிப் பாண்டிங் கூறிய தடாலடி பதில்.. அப்படி என்ன கூறினார்?
மும்பை: ரிஷப் பண்ட் மீது விமர்சனங்கள் குவிந்து வரும் சூழலில் பயிற்சியாளர் ரிக்கிப் பாண்டிங் தடாலடி பதில் கொடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 59வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் டெல்லி அணி தோல்வியடைந்தது. தொடரில் இருந்தும் வெளியேறியது.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்களை சேர்த்தது. இதன் பின்னர் ஆடிய மும்பை அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.
Recommended Video

டெல்லியின் தோல்வி
டெல்லி அணியின் இந்த தோல்விக்கு ரிஷப் பண்ட்-ன் கேப்டன்சி சொதப்பல் தான் முக்கிய காரணமாக அமைந்தது. 160 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியில் 95 ரன்களுக்கெல்லாம் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் டிம் டேவிட் 11 பந்துகளில் 34 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டார்.

கேப்டன்சி தவறு
டிம் டேவிட், தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகியிருக்க வேண்டும். ஷர்துல் தாக்கூர் வீசிய பந்து பேட்டில் எட்ஜானது. இதற்கு அம்பயர் நாட் அவுட் கொடுத்தார். எனினும் கேப்டன் ரிஷப் பண்ட் கையில் 2 ரிவ்யூக்களை வைத்திருந்த போதும், அதனை உபயோகிக்கவில்லை. இதுவே டெல்லி தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதனால் பண்ட் மீது விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

பாண்டிங்கின் பேச்சு
இந்நிலையில் பண்ட் கேப்டன்சி குறித்து பயிற்சியாளர் ரிக்கிப் பாண்டிங் பேசியுள்ளார். கேப்டன்சிக்கு ரிஷப் பண்ட் ஒரு சிறந்த நபர் தான் என்பதை இன்னும் நம்புகிறேன். கடந்த சீசனில் கூட சிறப்பாக செயல்பட்டிருந்தார். ஸ்ரேயாஸ் ஐயருக்கு பின்பு டெல்லி அணியை எந்தவித சிக்கலும் இன்றி சிறப்பாக வழிநடத்துகிறார்.

ஆதரவு இருக்கிறது
பண்ட் இளம் வீரர் ஆவார். இன்னும் கேப்டன்சி குறித்து கற்றுக்கொண்டே இருக்கிறார். ஐபிஎல் போன்ற டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக இருப்பது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை. ஒரு சின்ன விஷயம் கூட பெரிய சிக்கலை உண்டாக்கும். என்னுடைய முழு ஆதரவு தற்போதும் ரிஷப் பண்ட்-க்கு உள்ளது.


Click it and Unblock the Notifications