Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெல்லி அணிக்கு அநியாயம்?? ஆவேசத்தில் கத்திய ரிக்கி பாண்டிங்.. கொல்கத்தா போட்டியில் ஏற்பட்ட பரபரப்பு

மும்பை: ஐபிஎல் போட்டியில் ரிக்கிப்பாண்டிங் கடும் ஆவேசத்துடன் நடுவர்களுடன் சண்டைப்போட்ட வீடியோ ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

நேற்று நடைபெற்ற 19வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி சிறப்பாக பேட்டிங் செய்தது.

ஆச்சரிய சம்பவம்

அனைத்தும் சிறப்பாக இருந்த போதும், மிகவும் அமைதியான நபரான பயிற்சியாளர் ரிக்கிப்பாண்டிங் திடீரென கோபப்பட்டார். ஆட்டத்தின் 19வது ஓவரை உமேஷ் யாதவ் வீச, கடைசி நேர ரன் குவிப்பிற்காக ஷர்துல் தாக்கூர் பேட்டிங் செய்தார். அப்போது ஆஃப் சைட் திசையில் வைட் லைனில் யார்க்கர் பந்து போடப்பட்டது. இது கிறீஸையும் தாண்டி சென்றதாக தெரிகிறது.

பாண்டிங் நடவடிக்கை

பாண்டிங் நடவடிக்கை

இதற்கு நடுவர் வைட் என அறிவித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் சரியான பந்து எனக் கூறியதால் டாட் பால் ஆனது. இதனை கண்டு ஆத்திரமடைந்த ரிக்கிப்பாண்டிங், டக் அவுட் அருகில் நின்றிருந்த 4வது நடுவரிடம் மிகவும் ஆவேசமாக கத்தினார். அதை கூட பார்க்க மாட்டீர்களா? இவ்வளவு வைடாக செல்லும் பந்துக்கு சரி எனக் கூறுகிறீர்கள்? நியாயமே இல்லை என கத்திய வீடியோ இணையத்தில் வெளியானது. மிகவும் அமைதியான பயிற்சியாளரா இப்படி செய்தது என அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.

இறுதியில் என்ன ஆனது

இறுதியில் என்ன ஆனது

டெல்லி அணிக்கு கடைசி நேரத்தில் பின்னடைவு ஏற்பட்ட போதும், அபார வெற்றி பெற்றது. ஓப்பனிங் ஜோடி பிரித்வி ஷா 51 ரன்கள், டேவிட் வார்னர் 61 ரன்களை குவித்தனர். கடைசியில் ஷர்துல் தாக்கூர் 11 பந்துகளில் 29 ரன்களை சேர்த்தார். குறிப்பாக அந்த சர்ச்சைக்குரிய 19வது ஓவரில் மட்டும் அவர் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதனால் 20 ஓவர்களில் அந்த அணி 215 - 5 ரன்களை சேர்த்தது.

 கேப்டன் இன்னிங்ஸ்

கேப்டன் இன்னிங்ஸ்

கடின இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில் பதற்றம் காரணமாகவே அடுத்தடுத்து விக்கெட் வீழ்ந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 33 பந்துகளில் 54 ரன்களையும், நிதிஷ் ராணா 20 பந்துகளில் 30 ரன்களை சேர்த்தனர். இதனால் 19.4 ஓவர்களில் அந்த அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Story first published: Monday, April 11, 2022, 10:54 [IST]
Other articles published on Apr 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+