Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரெய்னாவை கழற்றிவிட்டாரா தோனி..?? அதிருப்தியில் ரெய்னா.. தல, சின்ன தல நட்பில் விரிசல்..??

ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியில் ராமன், லட்சுமணன் போல் இருந்தவர்கள் தான் தோனியும், ரெய்னாவும்.

களத்தில் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடுவதும் சரி, களத்திற்கு வெளியேவும் சரி, இருவரும் குடும்ப நண்பர்கள் போல் தான் இருந்தனர்.

தோனி, ரெய்னவின் இந்த நட்பு 2008ஆம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய போதிலிருந்து தொடங்கியது.

ஒரே நாளில் ஓய்வு

ஒரே நாளில் ஓய்வு

தோனி டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன் ரெய்னாவிடம் தான் தனது முடிவை தெரிவித்தார். அப்போது இருவரும் கண் கலங்கி நின்ற புகைப்படம் ரசிகர்கள் மனதில் இருந்து இன்னும் நீங்காதவை. அவ்வளவு ஏன், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்த சில மணி துளிகளில் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

விரிசலின் தொடக்கம்

விரிசலின் தொடக்கம்

தோனி இல்லாமல் நான் இல்லை என்பதால் என் சகோதரர் ஓய்வு பெற்ற அதே நாளில் தாமும் இந்த முடிவை எடுத்துள்ளதாகரெய்னா விளக்கம் அளித்தார். இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின் போது ரெய்னா விலகினார். இதனால் சென்னை அணி படுதோல்வியை சந்தித்தது. அப்போது ரெய்னாவின் இந்த முடிவு தோனிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

ரெய்னா அதிருப்தி

ரெய்னா அதிருப்தி

இந்த நிலையில், 2021ஆம் ஆண்டு ஐ,.பி.எல். சீசனில் சென்னை அணிக்காக ரெய்னா விளையாடினாலும், அவரால் பழைய மாதிரி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இதனால் தோனி அவரை அணியை விட்டு நீக்கினார். மேலும், ஐ.பி.எல். 15வது சீசனுக்கு சென்னை அணி ரெய்னாவை தக்கவைக்கவில்லை. இதனால் ரெய்னா கடும் அதிருப்தியில் உள்ளார்.

Recommended Video

CSKவுக்கு வருவாரா Dinesh Karthik? IPL Auctionல் Dhoniயின் முடிவு என்ன | OneIndia Tamil
சோகத்தில் ரெய்னா

சோகத்தில் ரெய்னா

சென்னை அணிக்காக உடல் பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்த தம்மை அணி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்றும், ஒரு நன்றி கூட தெரிவிக்கவில்லை என்றும் ரெய்னா சோகத்தில் உள்ளார். இதே போன்று ஏலத்திலும் ரெய்னாவை தோனி எடுக்கும் முடிவில் இல்லை. தோனி தற்போது ஜடேஜாவிற்கு அதிக இடம் கொடுத்து வருவதால் ரெய்னா ஏமாற்றத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஏலத்தில் ரெய்னாவை சென்னை அணி ஏலத்தில் எடுக்க முயற்சி செய்யவில்லை என்றால், இந்த விரிசல் அதிகமாக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Story first published: Friday, February 4, 2022, 12:50 [IST]
Other articles published on Feb 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+