For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கேவில் நடப்பது என்ன? சீனியர்கள் இடையே மோதல்?ஓய்வு பெறுவதாக ராயுடு அறிவிப்பு -இறுதியில் டிவிஸ்ட்

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏதுவுமே சரியில்லை என்று தெள்ள தெளிவாக தெரிகிறது.

முதலில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி ராஜினாமா செய்து ஜடேஜா வந்தார், பிறகு ஜடேஜா ராஜினாமா செய்து தோனி மீண்டும் வந்தார்.

அதன் பிறகு ஜடேஜா குறித்து வெளிப்படையாக தோனி விமர்சனம் செய்தார். பிறகு காயம் காரணமாக தொடரை விட்டு ஜடேஜா வெளியேறியதாக கூறப்பட்டது.

ராயுடு அறிவிப்பு

ராயுடு அறிவிப்பு

இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் மற்றொரு சீனியரான அம்பத்தி ராயுடு ஓய்வு பெறுவதாக டிவிட்டரில் அறிவித்தார். 13 ஆண்டுகளாக இரு பெரிய அணிகளான மும்பை மற்றும் சிஎஸ்கே வில் விளையாடியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறி இருந்தார். இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் ராயுடுவுக்கு பிரயா விடை அளித்து வந்தனர்.

நிராகரித்த சிஎஸ்கே

நிராகரித்த சிஎஸ்கே

பின்னர், ஓய்வு குறித்து வெளியிட்ட டிவிட்டை ராயுடு நீக்கிவிட்டார். இதனால் ராயுடு உண்மையிலேயே ஓய்வு பெற்றாரா இல்லை வேறு ஏதாவது காரணமா என ரசிகர்கள் குழம்பினர். அப்போது சிஎஸ்கே அணியின் சி.ஆ.ஓ. காசி விஸ்வநாதன், ராயுடு ஓய்வு பெறவில்லை. அவர் தொடர்ந்து சிஎஸ்கே அணியில் தான் விளையாட உள்ளார் என தெரிவித்தார்.

சின்னப்பிள்ளை தனமா?

சின்னப்பிள்ளை தனமா?

ராயுடு கடந்த சில போட்டியில் சரியாக விளையாடவில்லை என்ற விரக்தியில் ஓய்வு முடிவை அறிவித்திருப்பார். இது மனதளவில் ஏற்பட்ட குழப்பத்தால் எடுத்த முடிவு என்றும் காசி விஸ்வநாதன் கூறினார். ஆனால், ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக கூறிவிட்டு, பின்னர் அந்த பதிவை நீக்கும் சின்னப்பிள்ளைத்தனமான விசயத்தை வீரர்கள் செய்வார்களா என்ன என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சிஎஸ்கேவில் பிரச்சினை

சிஎஸ்கே அணியில் பிரச்சினை இருப்பதையே இது காட்டுகிறது. சீனியர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராயுடு அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் பிறகு சிஎஸ்கே நிர்வாகம் அவரை சமாதானப்படுத்தி இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த கேப்டன் யார் என்ற மோதலில் எடுத்த முடிவா? இல்லை பேட்டிங்கில் சொதப்பியதற்காக தோனி திட்டியதால் ராயுடு எடுத்த முடிவா என்று கிரிக்கெட் விமர்சகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Story first published: Saturday, May 14, 2022, 22:15 [IST]
Other articles published on May 14, 2022
English summary
IPL 2022 – Rift in CSK Team as confusion over Rayudu retirement சிஎஸ்கேவில் நடப்பது என்ன? சீனியர்கள் இடையே மோதல்?ஓய்வு பெறுவதாக ராயுடு அறிவிப்பு -இறுதியில் டிவிஸ்ட்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+