தவறாக காட்டப்பட்ட சிக்னல்.. மாற்ற முடியாமல் தவித்த அம்பயர்கள்..கொல்கத்தாவுக்கு நடந்த வேடிக்கை விஷயம்
புனே: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி எடுத்த டிஆர்எஸ் முடிவு சர்ச்சையை கிளப்பியது.
61வது லீக் போட்டியாக நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது
இதனையடுத்து களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 177 ரன்களை விளாசியது.

கொல்கத்தா பேட்டிங்
தொடக்க வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களுக்கும், அஜிங்கியா ரகானே 28 ரன்களுக்கும் வெளியேறி ஏமாற்றினர். இதன் பின்னர் வந்த நிதிஷ் ராணா, ஸ்ரேயாஸ் ஐயர் சொற்ப ரன்களுக்கு வெளியேறியதால் கொல்கத்தா அணி தடுமாறியது இறுதியில் சாம் பில்லிங்ஸ் 34 ரன்கள், ஆண்ட்ரெ ரஸல் 49 ரன்களை அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
ரிங்கு சிங்கின் விக்கெட்
இந்நிலையில் இப்போட்டியின் போது சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ஆட்டத்தின் 12 ஓவரை டி.நடராஜன் வீசினார். அவர் வீசிய யார்க்கர் பந்தை பேட்ஸ்மேன் ரிங்கு சிங் எதிர்பார்க்கவில்லை. இதனால் பேடில் பட்டு எல்.பி.டபள்யூ ஆனார். இதற்கு அம்பயர் அவுட் கொடுத்தார். ஆனால் பந்து பேட்டிலும் பட்டது போன்று தெரிந்தது.

3வது நடுவருக்கு பரிந்துரை
இதனையடுத்து ரிங்கு சிங், தனது மறுமுணையில் இருந்த சாம் பில்லிங்ஸுடன் ஆலோசித்து 3வது நடுவருக்கு சிக்னல் கொடுக்கப்பட்டது. எனினும் DRS நேரம் மட்டும் ஓடிக்கொண்டே இருந்தது. இறுதியில் நேரம் முடிந்து ரிங்கு சிங்கை களத்தை விட்டு வெளியேறுமாறு நடுவர் கூறினார். 3வது நடுவருக்கு பரிந்துரைத்தும் ஏன்வெளியேற சொன்னார்கள் என யாருக்குமே புரியவில்லை.

Click it and Unblock the Notifications